- தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்ஸின் விலையில் அதிகரிப்பு
- ஆஸ்டர் மற்றும் காமெட்டின் விலைகளிலும் மாற்றங்கள்
எம்ஜி மோட்டார் இந்தியா தனது சில மாடல்களின் விலையை உயர்த்தியுள்ளது. இந்த பண்டிகை காலத்திலிருந்து ஆறு மாதங்களுக்கு ஒருமுறை புதிய காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள கார் தயாரிப்பு நிறுவனம், ஹெக்டர், ஹெக்டர் ப்ளஸ், காமெட் மற்றும் ஆஸ்டர் ஆகியவற்றின் விலைகளை உயர்த்தியுள்ளது.
எம்ஜி ஹெக்டரில், இந்த டூ ரோ எஸ்யுவி ரூ. 22,000 வரை விலை மாற்றத்தைக் கண்டுள்ளது. ஸ்டைல் டர்போ 1.5 எம்டீ, ஷார்ப் ப்ரோ 2.0 டீசல் எம்டீ, ஷார்ப் ப்ரோ 2.0 டீசல் எம்டீ டூயல்-டோன் மற்றும் பிளாக்ஸ்டோர்ம் மற்றும் எவர்கிரீன் எடிஷன் ஆகியவற்றின் விலைகள் மாறாமல் உள்ளது.
அதே நேரத்தில், எம்ஜி ஹெக்டர் ப்ளஸின் விலை ரூ. 30,000 வரை அதிகரித்துள்ளது. சேவ்வி ப்ரோ 1.5 டர்போ-பெட்ரோல் சிவிடீ 7-சீட்டர் டூயல்-டோன், எவர்கிரீன் எடிஷன் மற்றும் பிளாக்ஸ்டோர்ம் எடிஷன் உள்ளிட்ட அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வேரியன்ட்ஸின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
இந்த புதிய விலைகள் உடனடியாக அமலுக்கு வருவதால், ஹெக்டரின் புதிய விலை ரூ. 13.99 லட்சம் முதல் ரூ. 22.12 லட்சம் வரை உள்ளது. அதேபோல், ஹெக்டர் ப்ளஸின் புதிய விலைகள் இப்போது ரூ. 18.20 லட்சம் முதல் ரூ. 22.96 லட்சம் வரை (அனைத்து விலைகளும், எக்ஸ்-ஷோரூம்)
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்