- புதிய எடிஷனின் விலை ரூ. 41.05 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
- குளோஸ்டர் பிளாக்ஸ்டோர்ம்ஐ விட ரூ. 2.82 லட்சம் குறைவு
எம்ஜி மோட்டார்இந்தியாஆனது குளோஸ்டரின் டெசர்ட்ஸ்டோர்ம் மற்றும் ஸ்னோஸ்டோர்ம் எடிஷன்னை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, இதன் விலை ரூ. 41.05 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). பிளாக்ஸ்டோர்ம் வெர்ஷனால் ஈர்க்கப்பட்டு, டெசர்ட்ஸ்டோர்ம் டீப் கோல்டன் பெயிண்ட்டும், அதேசமயம் ஸ்னோஸ்டோர்ம் பேர்ல் ஒயிட் நிறத்தில் பிளாக் ரூஃப் தீம் உடன் வருகிறது.
குளோஸ்டர் டெசர்ட்ஸ்டோர்ம் எடிஷனில் டீப் கோல்டன் நிறம், ரெட் பிரேக் காலிப்பர்ஸ் மற்றும் ஹெட்லேம்ப்ஸில் இன்சர்ட்ஸ் உள்ளன. கூடுதலாக, இதன் கிரில், அலோய் வீல்ஸ், ஓஆர்விஎம்’ஸ், டோர் ஹேண்டல்ஸ், ரூஃப் ரெயில்ஸ், ஸ்பாய்லர் மற்றும் பில்லர் ஆகியவற்றில் பிளாக்-அவுட் கலரை கொண்டுள்ளது. இன்டீரியரில், இது ஒரு பிளாக் தீம் மற்றும் ஸ்டீயரிங் வீலைப் பெறுகிறது.
2024 எம்ஜி குளோஸ்டர்ஸ்னோஸ்டோர்ம்ஆனது பேர்ல் ஒயிட் மற்றும் பிளாக் ரூஃப் என டூயல்-டோன் வண்ணத் திட்டத்தில் வருகிறது. ஃப்ரண்ட் மற்றும் ரியர் பம்ப்பர்கள் மற்றும் ஹெட்லேம்ப்களில் ரெட் இன்சர்ட்ஸ் உள்ளன, அதே நேரத்தில் கிரில், அலோய்ஸ், ஸ்பாய்லர், டோர் ஹேண்டல்ஸ், ஓஆர்விஎம்’ஸ், நான்கு விண்டோவை சுற்றிலும் ஃபாக் லைட்ஸ்ஸை க்ளோஸ் பிளாக் நிறத்தில் உள்ளன. அதன் டெயில்லைட்களிலும் ஸ்மோக்ட் எஃபெக்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இன்டீரியரில், இது பிளாக் தீம் மற்றும் பிளாக் ஸ்டீயரிங் வீலையும் பெறுகிறது.
குளோஸ்டர் டெசர்ட்ஸ்டோர்ம்மற்றும் ஸ்னோஸ்டோர்ம்ஆகிய இரண்டும் 'டெசர்ட்ஸ்டோர்ம்' மற்றும் 'ஸ்னோஸ்டார்ம்' பேட்ஜ்கள், சீட் மசாஜர்கள், தீம் கார்பெட் மேட்ஸ், டாஷ்போர்டு மேட்ஸ் மற்றும் ஜெபிஎல் ஸ்பீக்கர்கள் போன்ற டீலர்-லெவல் துணைக்கருவிகளுடன் கிடைக்கின்றன.
புதிய எம்ஜி குளோஸ்டர் ஸ்பெஷல் எடிஷனின் விலை ரூ. 41.05 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இந்த எடிஷன் பிளாக்ஸ்டோர்ம்எடிஷன் ஐ விட ரூ. 2.82 லட்சம் மலிவானது. இரண்டு எடிஷனுமே செவன்-சீட்டர் லே-அவுட்டில் வருகின்றன, சிக்ஸ்-சீட்டர் ட்ரிம் டெசர்ட்ஸ்டோர்ம் எடிஷனில் மட்டுமே கிடைக்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்