- வரும் மதங்களில்ன் லான்ச் செய்யப்படலாம்
- புதிய எக்ஸ்டீரியர் டிசைன்னைப் பெறுகிறது
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் அதன் அறிமுகத்திற்கு முன்னதாக, ஃபேஸ்லிஃப்ட் குளோஸ்டரை நாட்டில் தொடர்ந்து டெஸ்ட் செய்து வருகிறது, இது வரும் மாதங்களில் லான்ச் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகப்படுத்தப்பட்டதும், இந்த புதுப்பிக்கப்பட்ட த்ரீ-ரோ எஸ்யுவி ஸ்கோடா கோடியாக், டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஜீப் மெரிடியன் ஆகியவற்றுடன் போட்டியிடும்.
இங்குள்ள படங்களில் காணப்படுவது போல், குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் டெஸ்ட் மாடல் கெமோஃப்லாஜ் செய்யப்பட்டுள்ளது, இதனால் முக்கிய விவரங்கள் மறைக்கப்படுகின்றன. காணக்கூடிய சில கூறுகளில், திருத்தப்பட்ட ஹெட்லேம்ப்களுடன் புதுப்பிக்கப்பட்ட ஃபேஷியா, ஹோரிசொன்டள்ஸ்லேட்டுகளுடன் புதிய கிரில் மற்றும் முக்கோண செருகல்கள் மற்றும் இருபுறமும் இரண்டு ஸ்லேட்டுகள் கொண்ட திருத்தப்பட்ட பம்பர் ஆகியவை அடங்கும். புதிய அலோய் வீல்கள், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ரியர் பம்பர் மற்றும் டெயில்கேட் மற்றும் புதிய எல்இடி டெயில்லைட்கள் ஆகியவை இதில் உள்ளன.
குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட்டின் உட்புறம் தற்போதைய மாடலைப் போலவே இருக்கும், லெவல் 2 ஏடாஸ், பனோரமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, பவ்ர்ட் மற்றும் வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ் மற்றும் பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை இருக்கும்.
2024 குளோஸ்டர் ஒற்றை டர்போ மற்றும் ட்வின்-டர்போ விருப்பங்களுடன் 2.0 லிட்டர் டீசல் இன்ஜினுடன் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஸ்யுவி இன்ஜினில் ஸ்டாண்டர்ட் எய்ட்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்