- குளோஸ்டரில் ரிடிசைன் செய்யப்பட்ட அலோய் வீல்ஸுடன் திருத்தப்பட்ட ஃப்ரண்ட் ஃபேஷியாவை பெறுகிறது
- இன்ஜினில் மாற்றங்கள் இல்லாமல் இருக்கலாம்
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் அதன் ஃபிளாக்ஷிப் எஸ்யூவி குளோஸ்டரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்னை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. மேலும், பல சந்தர்ப்பங்களில் சோதனையின் போது இந்த டெஸ்ட் மாடல் தென்ப்பட்டது. இருப்பினும், இந்த கட்டுரையில் வெளிவந்துள்ள புதிய ஸ்பை ஷாட்ஸ் மூலம் வெளிப்படுத்தப்பட்ட கூடுதல் விவரங்களை இதில் பார்போம்.
ஸ்பை ஷாட்ஸில் காணப்படுவது போல், குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட்டில் ஒரு புதுமையான ஃப்ரண்ட் ஃபேஷியாவை காட்டுகிறது. இதில் ஸிலீக் எல்இடி டிஆர்எல்’ஸ், ஹோரிசொன்டள் ஸ்லேட்ஸ் கொண்ட வைடர் கிரில், செங்குத்தாக பொருத்தப்பட்ட ஸ்பிளிட் எல்இடி ஹெட்லேம்ப்ஸ் மற்றும் ஸ்கூப்ட்-அவுட் போனேட்டை பெறும்.
மறுபுறம், குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் புதிய அலோய் வீல்ஸுடன் தற்போதைய ஐடிரேஷனின் சில்ஹவுட்டுடன் பயனடையும். ரியரைப் பொறுத்தவரை, காரில் கனெக்டெட் லைட் பார், ரிடிசைன் செய்யப்பட்ட ரியர் பம்பர் மற்றும் சற்று ட்வீக் செய்யப்பட்ட டெயில்கேட் ஆகியவற்றுடன் திருத்தப்பட்ட டெயில்லைட்டுகளின் வடிவத்தில் சிறிய மாற்றங்களைப் பெறுகிறது.
அம்சங்களைப் பொறுத்தவரை, குளோஸ்டர் மாடல் தற்போது அதன் செக்மெண்ட்டில் அதிக அம்சங்களைக் கொண்ட மிகவும் அம்சம் நிறைந்த மாடலாக உள்ளது. மேலும், குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் தொடர்ந்து பல அம்சங்களை வழங்கும். இது ஒரு பெரிய ஃபிலோட்டிங்க் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்ட், ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், வென்டிலேடெட் மற்றும் பவர்ட் ஃப்ரண்ட் சீட்ஸ், வயர்லெஸ் சார்ஜர், 360 டிகிரி சரவுண்ட் கேமரா, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் லெவல் 2 ஏடாஸ் சூட் போன்ற அம்சங்களுடன் வரலாம்.
குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் தற்போதைய மாடலில் உள்ள அதே இன்ஜினைக் கொண்டுள்ளது. மேலும், இது எய்ட்-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்ட டர்போ மற்றும் ட்வின்-டர்போ வேரியன்ட்டில் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின்களுடன் தொடரும். அறிமுகப்படுத்தப்பட்டதும், அப்டேடெட் எம்ஜி குளோஸ்டர், விற்பனையில் அதிக சந்தைப் பங்கைக் கொண்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் உடன், ஜீப் மெரிடியன், ஸ்கோடா கோடியாக் மற்றும் ஹுண்டாய் தூக்ஸன் போன்றவற்றுடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்
புகைப்பட ஆதாரம் - ரஷ்லேன்