- எல்இடி டிஆர்எல் டிசைன் விவரங்கள் லீக் ஆனது
- இன்ஜினில் மாற்றங்கள் இல்லாமல் இருக்கலாம்
எம்ஜி மோட்டார் இந்தியா விரைவில் உலகளவில் புதுப்பிக்கப்பட்ட LDV D90/மேக்சஸ் D90 ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடலை குளோஸ்டராக இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. மேலும், ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட சமீபத்திய மாற்றங்களுடன் இன்டீரியர் டிசைன் மேம்படுத்தல்களிலிருந்து குளோஸ்டர் வழங்குகிறது.
இங்கே படத்தில் காணப்படுவது போல், குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் ஒரு பெரிய த்ரீ-ஸ்லாட் கிரில் மற்றும் ஒரு புதிய ஃபேஷியாவுடன் பிராண்ட் லோகோவை ஈர்ப்பின் மையமாக கொண்டிருக்கும். மேலும் என்னவென்றால், ஹெட்லைட்கள் கனசதுர வடிவ ஸ்பிளிட் ஹெட்லேம்ப் அமைப்புடன் புதிய தோற்றத்தைப் பெறுகின்றன. பின்னர், எல்இடி டிஆர்எல்கள் கிரில்லில் நீட்டி, புதுப்பிக்கப்பட்ட குளோஸ்டரின் ஃப்ரண்ட் ப்ரோஃபைளில் ஒரு நல்ல அடையாளத்தைக் கொண்டு வருகின்றன.
மறுபுறம், டெஸ்ட் மாடல் தற்போதைய வெர்ஷனின் அதே அலோ வீல்களில் காண முடிந்தது. ஆனால் இந்த மாடல் அறிமுகத்தில் புதிய அலோய் வீல்களைப் பெறும் என எதிர்பார்க்கிறோம். ரியரில், முழு அளவிலான எஸ்யுவி ஆனது இணைக்கும் லைட் பாருடன் திருத்தப்பட்ட எல்இடி டெயில்லேம்ப்ஸைப் பெறுகிறது.
அம்சங்களைப் பொறுத்தவரை, குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், வென்டிலேடெட் மற்றும் பவர்ட் ஃப்ரண்ட் சீட்ஸ், வயர்லெஸ் சார்ஜர், 360 டிகிரி சரவுண்ட் கேமரா, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் லெவல் 2 ஏடாஸ் போன்ற அம்சங்களுடன் வரலாம்.
எம்ஜி இன்ஜின் விருப்பத்தில் எந்த மாற்றமும் செய்ய வாய்ப்பில்லை, மேலும், ஃபிளாக்ஷிப் எஸ்யுவி எய்ட்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்ட 2.0-லிட்டர் டீசல் இன்ஜினுடன் தொடரும். இந்த இன்ஜின் இரண்டு வேரியன்ட்ஸில் வழங்கப்படுகிறது- டர்போ மற்றும் ட்வின்-டர்போ, இது அதிகபட்சமாக 213bhp ஆற்றலையும், அதிகபட்சமாக 478Nm டோர்க்கையும் உற்பத்தி செய்கிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்