- வரும் மாதங்களில் வழங்கப்படலாம்
- புதிய டிசைன் மற்றும் அம்சங்கள் கிடைக்கும்
எம்ஜி அதன் தற்போதைய குளோஸ்டர் எஸ்யுவியின் விற்பனையில் சிரமப்படலாம், ஆனால் நிறுவனம் அதன் அறிமுகத்திற்கு முன்னதாகவே ஃபேஸ்லிஃப்ட் மாடலை நன்றாக சோதித்து வருகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட ஸ்பை ஷாட்ஸில் இந்த அப்டேடெட் த்ரீ-ரோ எஸ்யுவியின் இன்டீரியரைப் பற்றிய ஒரு பார்வையை அளித்துள்ளன.
மேக்சஸ் D90 அடிப்படையிலான எம்ஜி குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட்டில், புதிய டெயில்லைட்கள் மற்றும் புதிய எக்ஸாஸ்ட் அமைப்பைக் கொண்டிருப்பதை படங்களில் காணலாம். இது தவிர, ஃப்ரண்ட்டில் புதிய கிரில், புதிய லைட்டிங் அமைப்பு மற்றும் புதிதாக வடிவமைக்கப்பட்ட பம்பர் ஆகியவை அடங்கும்.
2025 எம்ஜி குளோஸ்டரின் இன்டீரியரில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும். பெரிய ஃப்ரீஸ்டாண்டிங் டச்ஸ்கிரீன், சதுர ஏசி வென்ட்ஸ் மற்றும் டூயல் வயர்லெஸ் மொபைல் சார்ஜர்களுடன் சென்டர் கன்சோல் முழுமையாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டுருக்கும். கூடுதலாக, எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் சுவிட்ச் ஒரு புதிய இடத்தில் இருக்கும், இப்போது இரண்டு ரோட்டரி டயல்கள் மற்றும் மூன்று டிஃபெரன்ஷியல் லாக் பட்டன்களும் வழங்கப்படும். இதனுடன், ஒரு புதிய டைமண்ட் தையல் கொண்ட பிளாக் அப்ஹோல்ஸ்டரியில் காணப்படும்.
புதிய குளோஸ்டரில், பனோரமிக் சன்ரூஃப், லெவல் 2 ஏடாஸ், ஆட்டோ-டிம்மிங் ஐஆர்விஎம், பவர்ட் டெயில்கேட் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவற்றின் அம்சங்களைப் பற்றி பேசுவது முன்பு போலவே தக்கவைக்கப்படும்.
எம்ஜி குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட்டில் உள்ள 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் டர்போ மற்றும் ட்வின்-டர்போ வடிவங்களில் மாறாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன், எய்ட்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனும் அப்படியே இருக்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்