- குளோஸ்டர் பிளாக்ஸ்டோர்ம் எடிஷன் காஸ்மெட்டிக் மாற்றங்களைப் பெறுகிறது
- குளோஸ்டரின் வழக்கமான இன்ஜினைப் பெறும்
குளோஸ்டர் பிளாக்ஸ்டோர்ம் எடிஷன் என்றால் என்ன?
இந்த மாத தொடக்கத்தில், எம்ஜி மோட்டார்ஸ் குளோஸ்டரின் பிளாக்ஸ்டோர்ம் எடிஷனை அறிமுகப்படுத்தியது, இதில் ஒரு டார்க் எக்ஸ்டீரியர் ஷேட் மற்றும் ரெட் அக்ஸ்ன்ட்ஸ் உடன் பிளாக் இன்டீரியர் கொண்ட டார்க் தீம்மை இடம் பெற்றது. இது பிராண்டின் 2.0 லிட்டர் டீசல் இன்ஜினுடன் இரண்டு வெர்ஷன்ஸில் பொருத்தப்பட்டுள்ளது - டர்போ மற்றும் ட்வின்-டர்போ. இது ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டை போலவே பர்ஃபார்மன்ஸை வழங்குகிறதா என்பதை அறிய, நாங்கள் அதை டெஸ்ட் செய்தோம்.
எம்ஜி குளோஸ்டர் பிளாக்ஸ்டோர்மின் ஆக்ஸிலரேஷன்
ஒருமணிநேரத்திற்கு0-60 கி.மீ
ஒருமணிநேரத்திற்கு0-100 கி.மீ
இந்த பெரிய க்ளோஸ்டரின் உரிமையாளர்களுக்கு ஸ்பீட் முதன்மையான முன்னுரிமையாக இருக்காது என்றாலும், ஒரு கார் எவ்வளவு விரைவாகவும் எஃபிஷியன்டாகவும் போக்குவரத்தில் இருந்து தப்பிக்க முடியும் என்பதைப் பற்றிய நுண்ணறிவை முடுக்க விவரங்கள் வழங்குகின்றது. எங்களின் வி-பாக்ஸ் புள்ளி விவரங்களின்படி, பிளாக்ஸ்டோர்ம் எடிஷன் ஸ்டாண்டர்ட் வெர்ஷனைப் போலவே உள்ளது, ஒரு மணி நேரத்திற்கு 0-60 கி.மீ ஸ்பீட் 4.64 வினாடிகளில் நிறைவுற்றது. ஒரு மணி நேரத்திற்கு 0-100 கி.மீ ஓட்டம் 11.87 வினாடிகள் எடுத்தது, இது ஒரு நல்ல விஷ்யம் தான் இவ்வளவு பெரிய எஸ்யுவிக்கு.
எம்ஜி குளோஸ்டர் பிளாக்ஸ்டோர்மின் இன்-கியர் ஆக்ஸிலரேஷன் எப்படி உள்ளது?
கிக்-டௌனில் ஒரு மணி நேரத்திற்கு 20-80 கி.மீ
கிக்-டௌனில் ஒரு மணி நேரத்திற்கு 40-100 கி.மீ
எங்கள் புள்ளி விவரங்கள் காரின் பவரைப் பற்றிய நுண்ணறிவை வழங்குகிறது. பிளாக்ஸ்டோர்ம் எடிஷன் ஒரு மணி நேரத்திற்கு 20-80 கி.மீ ஸ்பீடை வெறும் 7.11 வினாடிகளில் எட்டியது, அதே நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கு 40-100 கி.மீ ஓட்டம் 9.01 வினாடிகள் ஆனது. வழக்கமான குளோஸ்டரைப் போலவே பிளாக்ஸ்டோர்ம் விரைவாக ஆக்ஸிலரேட் செய்யக்கூடியது என்பதை இந்த முடிவுகள் நிரூபிக்கின்றன, இது மற்ற வாகனங்களை ஓவர்டேக் செய்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பிளாக்ஸ்டோர்முடன் லாங் ட்ரைவ்ஸ் எடுக்கத் திட்டமிடும் உரிமையாளர்களுக்கு இது ஒரு முக்கியமான காரணியாகும்.
எம்ஜி குளோஸ்டர் பிளாக்ஸ்டோர்ம் இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் விவரக்குறிப்புகள்
இதன் இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் விருப்பங்களைப் பொறுத்தவரை, முன்பு குறிப்பிட்டது போல், பிளாக்ஸ்டோர்ம் எடிஷன் ஸ்டாண்டர்ட் எம்ஜி குளோஸ்டர் போன்ற விருப்பங்களைக் கொண்டுள்ளது. இதில் 2WD அமைப்புடன் 2.0 லிட்டர் டர்போ டீசல் மில் மற்றும் 4WD அமைப்புடன் 2.0 லிட்டர் ட்வின்-டர்போ டீசல் யூனிட் ஆகியவை அடங்கும். இதை தவிர, எயிட்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் போர்ட்ஃபோலியோ முழுவதும் நிலையானது.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்