- பிளாக்ஸ்டோர்ம் எடிஷன் 2WD மற்றும் 4WD வெர்ஷன்ஸில் கிடைக்கிறது
- இன்ஜினில் எந்த மாற்றமும் இல்லை
ரூ. 40.30 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) குளோஸ்டரின் புதிய பிளாக்ஸ்டோர்ம் எடிஷனை எம்ஜி மோட்டார் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிஷன் 2WDமற்றும் 4WD வெர்ஷனில் சிக்ஸ் மற்றும் செவன் சீட்டர்ஸில் விற்பனை செய்யப்படுகிறது. அதன் எக்ஸ்டீரியர் மற்றும் இன்டீரியரில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
குளோஸ்டர் பிளாக்ஸ்டோர்ம் எடிஷனில், ஸ்டாண்டர்ட் வேரியன்டை ஒப்பிடும்போது ரெட் அக்செண்ட் உடன் புதிய மெட்டாலிக் பிளாக் பெயிண்ட் பெறுகிறது. இது முன் மற்றும் பின்புறத்தில் ரெட் ஸ்கிட் பிளேட்ஸ், ஓவிஆர்எம்’ஸ, டோர் பேனல்ஸ் மற்றும் ரெட் கார்னிஷ் ட்ரீட்மெண்ட் உடன் ஹெட்லைட் க்ளஸ்டர் ஸ் ஆகியவற்றைப் பெறுகிறது. முன் ஃபெண்டர்ஸில் பிளாக்ஸ்டோர்ம் பேட்ஜ்ஸ், டெயில்கேட்டில் பிளாக் பெயிண்டில் எழுதப்பட்ட குளோஸ்டர், குரோம் ஸ்லேட்ஸ்க்குப் பதிலாக மறுவடிவமைப்பு செய்யப்பட்ட முன் அறுகோண மெஷ் பேட்டர்ன் கிரில், பிளாக் அவுட் அலோய் வீல்ஸ், ரூஃப் ரெயில்ஸ், ஸ்மோக் டெயில்லைட்ஸ், விண்டோ மற்றும் ஃபாக் லேம்ப் சரவுண்ட்ஸ் ஆகியவை அடங்கும்.
இதன் உள்ளே ஸ்டாண்டர்ட் பிளாக் மற்றும் டான் ப்ரௌன் தீம்ஸ்க்கு பதிலாக டார்க் தீம் மற்றும் பிளாக் டாஷ்போர்டு மற்றும் அப்ஹோல்ஸ்டரி ஆகியவற்றைப் பெறுகிறது. மேலும், டாஷ்போர்டு மற்றும் சென்டர் கன்சோல் பட்டன்ஸ், ஃப்ளோர் மேட்ஸ், டோர் பேட்ஸ் மற்றும் ஆம்பியன்ட் லைட்டிங்ஸில் போல்டு ரெட் நிறம் சேர்க்கப்பட்டுள்ளது.
இது புதிய எமிஷன் விதிமுறைகளை சந்திக்க டர்போ மற்றும் ட்வின் ஆப்ஷன்ஸுடன் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இரண்டு இன்ஜின்ஸும் எயிட்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளன. 4WD சிஸ்டம் டர்போ-ட்வின் வேரியன்டில் உள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிக்கிறோம்.
எம்ஜி குளோஸ்டர் பிளாக்ஸ்டோர்ம் எடிஷனின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் பின்வருபவை:
சிக்ஸ் சீட்டர் 2WD | ரூ. 40.30 லட்சம் |
செவன் சீட்டர் 2WD | ரூ. 40.30 லட்சம் |
சிக்ஸ் சீட்டர் 4WD | ரூ. 43.08 லட்சம் |
செவன் சீட்டர் 4WD | ரூ. 43.08 லட்சம் |
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்