- இது மூன்று வேரியன்ட்ஸில் கிடைக்கிறது
- இதன் விலை ரூ. 9.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
எம்ஜி மோட்டார்ஸ் தனது புதிய எலக்ட்ரிக் காரான விண்ட்சர் இவி’யை இந்தியா முழுவதும் டெலிவரி செய்ய தொடங்கியுள்ளது. இந்த இவி ஆனது எக்சைட், எக்ஸ்க்லூசிவ் மற்றும் எசென்ஸ் ஆகிய மூன்று வேரியன்ட்ஸில் கிடைக்கிறது, இதன் விலை ரூ. 9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இல் தொடங்குகிறது.
விண்ட்சர் இவி ஆனது 38kWh பேட்டரி பேக்கைக் கொண்டுள்ளது, இது ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 332 கிமீ வரை செல்லும். இந்த இன்ஜின் 134bhp பவரையும் 200Nm டோர்க் திறனையும் உற்பத்தி செய்கிறது. இகோ, இகோ+, நார்மல் மற்றும் ஸ்போர்ட் ஆகிய நான்கு டிரைவிங் மோட்ஸ் உள்ளது.
இந்த மாடல் நான்கு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. எம்ஜி ஆனது பேட்டரியை ஒரு சேவையாக (BaaS) வழங்கியுள்ளது, இது வாடிக்கையாளர்களுக்கு பேட்டரி செலவைக் குறைக்க உதவுகிறது.
எம்ஜி விண்ட்சர் இவி ஆனது அதன் விலை மற்றும் சிறப்பம்சங்களுக்காக மட்டும் கவனத்தை ஈர்க்கிறது, ஆனால் அது வழங்கும் பேட்டரி மற்றும் டிரைவிங் ரேஞ்சிலும் கவனம் செலுத்துகிறது, இது மார்க்கெட்டில் வலுவான தேர்வாக அமைகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்