- எம்ஜியின் சிறிய இவி மூன்று வேரியண்ட்ஸில் கிடைக்கிறது
- காமெட் இவி 230 கிமீ ரேஞ்சை தரும்
எம்ஜி மோட்டார் இந்தியா இந்த மாத தொடக்கத்தில் காமெட் இவியை நாட்டில் ரூ.7.98 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது. இந்த சிறிய இவி ஆனது பேஸ், ப்ளே மற்றும் ப்ளஷ் ஆகிய மூன்று வேரியண்ட்ஸில் வழங்கப்படுகிறது. இப்போது காமெட் இவியின் டெலிவரி தொடங்கப்பட்டுள்ளன மற்றும் மிட்-ஸ்பெக் ப்ளே வேரியண்ட் டீலர்ஷிப்ஸில் காணப்பட்டது.
காமெட் இவியின் ப்ளே வேரியண்ட் விலை ரூ.9.28 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). மிட்-வேரியண்ட் எல்இடி ஹெட்லேம்ஸ் மற்றும் டெயில்லைட்ஸ், முன் மற்றும் பின்புறத்தில் எல்இடி லைட் பார்ஸ், ஸ்பேஸ் க்ரே இன்டீரியர் தீம் மற்றும் லெதர்-வ்ராப் செய்யப்பட்ட ஸ்டீயரிங் வீல் ஆகியவற்றைப் பெறுகிறது. வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே கனெக்டிவிட்டி கூடிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட், ஐ-ஸ்மார்ட் கனெக்டெட் கார் டெக்னாலஜி, வாய்ஸ் கமாண்ட்ஸ், ஓடீஏ அப்டேட்ஸ், ஃபாஸ்ட் சார்ஜிங் யுஎஸ்பி போர்ட் மற்றும் கீலெஸ் என்ட்ரி ஃபங்ஷன் கொண்ட இரண்டு ஃபோல்டபிள் கீஸ் போன்ற அம்சங்களையும் இது பெறுகிறது.
இந்த கார் கேண்டி ஒயிட், அரோரா சில்வர், ஸ்டார்ரி பிளாக், ஸ்டார்ரி பிளாக் ரூஃப் உடன் கேண்டி ஒயிட் மற்றும் ஆப்பிள் க்ரீன் உடன் ஸ்டார்ரி பிளாக் ரூஃப் இந்த ஐந்து வண்ண விருப்பங்களில் விற்கப்படும். இது 250 க்கும் மேற்பட்ட கஸ்டமைசேஷன் விருப்பங்களில் வழங்கப்படுகிறது.
காமெட் இவி ஆனது 17.3kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது, இது 41bhp மற்றும் 110Nm டோர்க்கை உருவாக்குகிறது. இந்த இவி ஆனது ஒருமுறை சார்ஜ் செய்தால் 230 கிமீ ரேஞ்ச் வரை செல்லும், மேலும் 3.3kW சார்ஜரின் உதவியுடன் பேட்டரியை ஏழு மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்