- எம்ஜி ஆனது ஸ்மார்ட் இவி வரம்பில் எக்சைட் எஃப்சி மற்றும் எக்ஸ்க்லூசிவ் எஃப்சி வேரியன்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது
- எம்ஜி காமெட்டின் விலை இப்போது ரூ. 6.98 லட்சத்தில் தொடங்குகிறது
எம்ஜி ஆனது காமெட் வேரியண்ட்டில் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட இரண்டு புதிய வேரியன்ட்ஸுடன் தனது வரிசையை மேம்படுத்தியுள்ளது. இது எக்ஸைட் எஃப்சி மற்றும் எக்ஸ்க்லூசிவ் எஃப்சி என பெயரிடப்பட்டுள்ளது. இதில் எஃப்சி என்றால் ஃபாஸ்ட் சார்ஜ் என்று அர்த்தம். எம்ஜி, எக்ஸைட் எஃப்சி வேரியன்ட்டின் விலை ரூ. 8.23 லட்சமாகவும், எக்ஸ்க்லூசிவ் எஃப்சி வேரியன்ட்டின் விலை ரூ. 9.13 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு விலைகளும் எக்ஸ்-ஷோரூம் ஆகும்.
இந்த புதிய வேரியன்ட்ஸின் சேர்க்கையுடன் எம்ஜி அதன் காமெட் வரிசையின் பெயர்களையும் மாற்றியுள்ளது. முன்னதாக காமெட்டின் வேரியன்ட்ஸில் புஷ், ப்ளே மற்றும் பேஸ் என்று பெயரிடப்பட்டன, இப்போது இது எக்ஸிக்யூடிவ், எக்சைட் மற்றும் எக்ஸ்க்லூசிவ் என மாற்றப்பட்டுள்ளது.
புதிய காமெட்டின் சார்ஜிங் நேரம்
இது 7.4kW சார்ஜருடன் 0-100% சார்ஜ் செய்ய மூன்று மணிநேரம் வரை மட்டுமே ஆகும். மேலும் அதை 3.3kW சார்ஜர் மூலம் சார்ஜ் செய்ய ஏழு மணி நேரம் ஆனது. இந்த புதிய வேரியன்ட்டில், சார்ஜிங் நேரம் மட்டும் மாறியுள்ளது, இதன் முழு சார்ஜ்க்கு 230 கிமீ மைலேஜாக உள்ளது.
இந்த புதிய வேரியன்ட்ஸில், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், இஎஸ்பி, ரியர் டிஸ்க் பிரேக்குகள், பவர் ஃபோல்டபிள் ஓஆர்விஎம்கள், டிஆர்எல் டர்ன் இண்டிகேட்டர், கிரீப் மோடு மற்றும் பாடி கலர்டு ஓஆர்விஎம்கள் போன்ற அம்சங்களையும் பெறுவீர்கள்.
எம்ஜி மோட்டார் இந்தியாவின் துணை நிர்வாக இயக்குநர் கௌரவ் குப்தா கூறுகையில், “எம்ஜி நிறுவனம் எப்போதும் தனது வாடிக்கையாளர்களின் விருப்பங்களையும் தேவைகளையும் கருத்தில் கொண்டு தனது தயாரிப்புகளை வடிவமைக்கிறது. வாடிக்கையாளர்களின் கருத்துக்களைப் பெற்று, மார்க்கெட்டை கவனித்து, எம்ஜி ZS மற்றும் காமெட் ஆகியவற்றில் இரண்டு புதிய வேரியன்ட்ஸ்ஸை நாங்க சேர்த்துள்ளோம்' என்று அவர் கூறினார்.