- எம்ஜி காமெட் இவி கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது
- ஐந்து வண்ண விருப்பங்கள் மற்றும் மூன்று வேரியண்ட்ஸில் கிடைக்கின்றன
எம்ஜி மோட்டார் இந்தியா காமெட் இவிக்கான முன்பதிவுகளைத் தொடங்கியுள்ளது. 7.98 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் சிறிய இவியின் விலையை கார் தயாரிப்பாளர் கடந்த மாதம் அறிவித்தார்.
புதிய எம்ஜி காமெட் இவி மூன்று வேரியண்ட்ஸில் கிடைக்கிறது: பேஸ், ப்ளே மற்றும் ப்ளஷ். இந்த மாடல் கேண்டி ஒயிட், அரோரா சில்வர், ஸ்டார்ரி பிளாக், கேண்டி ஒயிட் ஸ்டார்ரி உடன் பிளாக் ரூஃப் மற்றும் ஆப்பிள் க்ரீன் உடன் ஸ்டார்ரி பிளாக் ரூஃப் ஆகிய ஐந்து வண்ணங்களில் கிடைக்கிறது. இது தவிர, இது 250 க்கும் மேற்பட்ட கஸ்டமைசேஷன் விருப்பங்களுடன் வழங்கப்படுகிறது.
காமெட் எலக்ட்ரிக் வெஹிக்கல் 17.3kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது, இது ஒரு எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 41Bhp மற்றும் 110Nm டோர்க்கையும் உருவாக்குகிறது. இந்த காரை முழுமையாக சார்ஜ் செய்தால் 230 கிமீ வரை செல்லும் என்று நிறுவனம் கூறுகிறது. இந்த மாடல் 3.3kW சார்ஜருடன் வருகிறது, இது ஏழு மணி நேரத்தில் 0-100 சதவீதம் சார்ஜ் செய்கிறது.
இது எம்ஜியின் இரண்டாவது இவி வாகனம் ஆகும், இது பிராண்டின் ZS இவிக்கு கீழே அமர்ந்துள்ளது. இதில் எல்இடி ஹெட்லேம்ப்ஸ் மற்றும் டெயில்லைட்ஸ், வீல் கவர்ஸுடன் கூடிய 12-இன்ச் ஸ்டீல் வீல்ஸ், கவர்ச்சிகரமான எம்ஜி லோகோ, ஏழு இன்ச் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்புடன் கூடிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஐ-ஸ்மார்ட் கனெக்டெட் கார் டெக்னாலஜி, ஓடீஏ அப்டேட், டீபீஎம்எஸ் மற்றும் ஒரு ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா வழங்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்