- இந்தியாவிற்கான எம்ஜியின் இது மூன்றாவது இவி ஆகும்
- பல ரேஞ்ச் விருப்பங்களுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
எம்ஜி கிளவுட் இவி இந்தியாவில் செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படலாம். இது இந்தியாவிற்கான எம்ஜியின் மூன்றாவது இவி ஆகும். இது பல ரேஞ்ச் விருப்பங்களுடன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்ஜி கிளவுட் இவி பல முறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது மற்றும் சமீபத்தில் அதன் பேடண்ட் படங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இப்போது எம்ஜி கிளவுட் இவி செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும் என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம்.
கிளவுட் இவி’யின் எக்ஸ்டீரியர் டிசைன் ஒரு கிராஸ்ஓவர் போன்றது, இதில் பெரிய ஃப்ரண்ட் கிரில், எல்இடி லைட் பேக்கேஜ், ஃப்ளஷ் டோர் ஹேண்டல்ஸ் மற்றும் ஃப்ரண்டில் சாய்ந்த ரூஃப்லைன் ஆகியவை அடங்கும். இதன் நீளம் 4.3 மீட்டர் மற்றும் வீல்பேஸ் 2.7 மீட்டர் ஆகும்.
360 டிகிரி கேமரா, டூயல் டிஜிட்டல் ஸ்கிரீன், க்ளைமேட் கன்ட்ரோல், கனெக்டெட் கார் டெக்னாலஜி, லெவல் 2 ஏடாஸ், பவர்ட் சீட்ஸ் மற்றும் சன்ரூஃப் போன்ற அம்சங்களை உள்ளடக்கிய சிறப்பம்சங்கள் கிளவுட் இவி’யின் மிகப்பெரிய அம்சமாக இருக்கும். இது 50.6kWh பேட்டரியுடன் வழங்கப்படும், இது எலக்ட்ரிக் மோட்டார் மூலம் 460 கிமீ வரை செல்லும். இருப்பினும், இது நீங்கள் தேர்ந்தெடுக்கும் வேரியன்ட்டைப் பொறுத்தது. இது எம்ஜியின் மிகவும் ப்ரீமியம் இவியாக இருக்கும் மேலும் இதன் விலை ரூ. 25 லட்சம் முதல் ரூ. 28 லட்சம் வரை இருக்கலாம். இது பிஒய்டி e6 உடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்