- இந்தியாவில் எம்ஜியின் மூன்றாவது எலக்ட்ரிக் காராக கிளவுட் இவி இருக்கும்
- செப்டம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்
எம்ஜி மோட்டார் பல சந்தர்ப்பங்களில் கிளவுட் இவியை நாட்டில் டெஸ்ட் செய்து வருகிறது, மேலும் அதன் ஸ்பை ஷாட்ஸ் வெளிவந்துள்ளன. இப்போது, செப்டம்பரில் நடைபெறவிருக்கும் அதன் அறிமுகத்திற்கு முன்னதாக, சியுவி என அழைக்கப்படும் இந்த வரவிருக்கும் காரின் முதல் டீசரை தற்போது நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ZS இவி மற்றும் காமெட் இவிக்கு பிறகு இந்திய சந்தையில் பிராண்டின் மூன்றாவது இவியாக இருக்கும் எம்ஜி கிளவுட் இவி ஆனது, அதன் யுஎஸ்பீகாக விற்கப்படும். டீஸர் வீடியோவில் காணப்படுவது போல், மாடல் புதிய வீல்ஸ், ஸ்லீக் எல்இடி டிஆர்எல்கள், ஃபேஷியாவில் எல்இடி லைட் பார் மற்றும் பேக்லிட் எம்ஜி லோகோ ஆகியவற்றைப் பெறும். முந்தயது கார் சார்ஜில் இருக்கும்போது மட்டுமே செயலில் இருக்கும்.
கிளவுட் இவியில் பனோரமிக் சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட்டிங், எலக்ட்ரிகள்ளி சரிசெய்யக்கூடிய ஃப்ரண்ட் சீட் மற்றும் ம்யூசிக் சிஸ்டத்துக்கான இன்டெக்ரேட்டட் கன்ட்ரோல்ஸுடன் கூடிய டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் மற்றும் பலவற்றைக் கொண்டிருக்கும்.
வெளிநாட்டு சந்தைகளில், 2024 எம்ஜி கிளவுட் இவி ஆனது 50.6kWh மற்றும் 37.9kWh பேட்டரி பேக்குகளுடன் விற்கப்படுகின்றன, இது முறையே 460கிமீ மற்றும் 360கிமீ டிரைவிங் ரேஞ்சை தரும் என்று கூறப்படும் எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மாடலின் அறிமுகமானது ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒரு புதிய தயாரிப்பை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தும் எம்ஜியின் தொடக்கத்தையும் குறிக்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்