- ரூ. 9.98 லட்சத்தில் தொடங்குகிறது ஆஸ்டரின் விலை
- 5 வேரியன்ட்ஸில் கிடைக்கிறது
எம்ஜி மோட்டார் இந்தியா தனது மாடல் வரம்பில் உள்ள அனைத்து கார்களின் விலைகளையும் சமீபத்தில் அதிகரித்துள்ளது. உயர்த்தப்பட்ட விலை உடனடியாக அமல்படுத்தப்படும். காமெட் இவி’யின் திருத்தப்பட்ட மற்றும் புதிய விலைகள் எங்கள் கார்வாலே வெப்சைட்டில் உள்ளது.
ஆஸ்டரைப் பொறுத்தவரை, க்ரெட்டா மற்றும் செல்டோஸுடன் போட்டியிடும் இந்த மிட்-சைஸ் எஸ்யுவியின் சில தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்ஸின் விலை ரூ. 20,000 வரை அதிகரித்துள்ளது. ஷார்ப் ப்ரோ 1.5 எம்டீ ஐவரி, ஷார்ப் ப்ரோ 1.5 சிவிடீ ஐவரி, சேவ்வி ப்ரோ 1.5 சிவிடீ ஐவரி மற்றும் சேவ்வி ப்ரோ 1.5 சிவிடீ சாங்ரியா வேரியன்ட்க்கு இந்த உயர்த்தப்பட்ட விலை பொருந்தும். இந்த மாடலின் என்ட்ரி லெவல் மற்றும் டாப்-எண்ட் வேரியன்ட்ஸின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்றாலும், ஆஸ்டர் தற்போது ரூ. 9.98 லட்சத்தில் இருந்து ரூ. 17.90 லட்சம் (அனைத்து விலைகள், எக்ஸ்-ஷோரூம்) வரை விற்கப்படுகிறது.
தற்போது, எம்ஜி ஆஸ்டர் ஆனது ஸ்பிரிண்ட், ஷைன், செலக்ட், ஷார்ப் ப்ரோ மற்றும் சேவ்வி ப்ரோ ஆகிய 5 வேரியன்ட்ஸில் வழங்கப்படுகிறது. மேலும் என்னவென்றால், வாடிக்கையாளர்கள் ஸ்டார்ரி பிளாக், கேண்டி ஒயிட், க்ளேஸ் ரெட், அரோரா சில்வர், ஹவானா க்ரே, கேண்டி ஒயிட் வித் ஸ்டாரி பிளாக் ரூஃப் போன்ற நிறங்களில் இருந்து தேர்வு செய்யலாம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்