- EX வேரியண்ட்ஸின் விலையில் எந்த மாற்றமும் இல்லை
- எம்ஜி ZS EVயின் விலையில் எந்த மாற்றமும் இல்லை
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் ஆஸ்டர் எஸ்யுவியின் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளது. ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா போன்றவற்றுக்கு போட்டியாக இருக்கும் மிட் சைஸ் எஸ்யுவி ஐந்து வேரியண்ட்ஸ் மற்றும் இரண்டு பெட்ரோல் இன்ஜின்ஸுடன் கிடைக்கிறது.
விலை உயர்வு மற்றும் அனைத்து வேரியண்ட்ஸின் எக்ஸ்-ஷோரூம் விலைகளையும் நாங்கள் உங்களுக்குக் இதில் கூறுகிறோம்.
எம்ஜி ஆஸ்டர் 1.5 பெட்ரோலின் புதிய விலை
வேரியண்ட்ஸ் | விலை உயர்வு | புதிய விலை (எக்ஸ்-ஷோரூம்) |
ஸ்டைல் MT | ரூ. 23,800 | ரூ. 10.82 லட்சம் |
சூப்பர் MT | ரூ. 26,000 | ரூ. 12.52 லட்சம் |
சூப்பர் CVT | ரூ. 25,800 | ரூ. 13.94 லட்சம் |
ஸ்மார்ட் MT | ரூ. 32,800 | ரூ. 14.21 லட்சம் |
ஷார்ப் MT | ரூ. 26,800 | ரூ. 15.15 லட்சம் |
ஷார்ப் MT சங்ரியா | ரூ. 26,800 | ரூ. 15.25 லட்சம் |
ஷார்ப் CVT | ரூ. 25,800 | ரூ. 16.14 லட்சம் |
ஸ்மார்ட் CVT | ரூ. 41,800 | ரூ. 15.50 லட்சம் |
ஷார்ப் CVT சங்ரியா | ரூ. 25,800 | ரூ. 16.24 லட்சம் |
சேவ்வி CVT | ரூ. 20,000 | ரூ. 17 லட்சம் |
சேவ்விCVT ரெட் | ரூ. 66,000 | ரூ. 16.24 லட்சம் |
EX வேரியண்ட்ஸின் விலைகள் மாறாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்டர்ரில் உள்ள 1.5-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 108bhp மற்றும் 144Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது மற்றும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் பெறலாம்.
எம்ஜி ஆஸ்டர் 1.3 பெட்ரோலின் புதிய விலை
வேரியண்ட்ஸ் | விலை உயர்வு | புதிய விலை (எக்ஸ்-ஷோரூம்) |
ஸ்மார்ட் டர்போ AT | ரூ. 32,000 | ரூ. 17.11 லட்சம் |
ஷார்ப் டர்போ AT | ரூ. 36,000 | ரூ. 18.06 லட்சம் |
சேவ்வி டர்போ AT ரெட் | ரூ. 26,000 | ரூ. 18.69 லட்சம் |
ஆஸ்டர் டர்போ சிக்ஸ்-ஸ்பீட் டோர்க் கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே வழங்கப்படுகிறது இது 138bhp மற்றும் 220Nm பீக் டோர்க்கை வெளியிடுகிறது. எம்ஜி இன்னும் அதன் வாகனங்களுக்கான BS6 2 அப்டேட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், அது பற்றிய கூடுதல் விவரங்கள் இதோ.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்