- ஹவானா க்ரே மற்றும் டூயல்-டோன் ஒயிட் மற்றும் பிளாக் நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது
- ஸ்பைஸ் ஆரஞ்சு நிறம் நிறுத்தப்பட்டது
எம்ஜி மோட்டார் இந்தியா ஆஸ்டரின் வண்ண விருப்பங்களை மறுசீரமைத்துள்ளது. மிட்-சைஸ் எஸ்யுவி இப்போது புதிய ஹவானா க்ரே நிறத்துடன் வருகிறது, அதேசமயம் ஸ்பைஸ் ஆரஞ்சு நிறம் நீக்கப்பட்டுள்ளது.
ஆஸ்டரின் புதிய கலர்
ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் இந்த புதிய நிறத்தை வாகன உற்பத்தியாளர் காட்சிப்படுத்தினார், மேலும் இது இப்போது அனைத்து வேரியண்ட்ஸிலும் வழங்கப்படுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், ஆஸ்டரை ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப் மற்றும் சாவி வேரியண்ட்ஸ்ஸில் காணலாம்.
அதே நேரத்தில், எம்ஜி புதிய டூயல்-டோன் ஒயிட் மற்றும் பிளாக் ஷேட் திட்டத்தையும் சேர்த்தது மற்றும் ஆஸ்டரின் வண்ணத்தில் இருந்து ஸ்பைஸ் ஆரஞ்சு நிறத்தை நீக்கியது.
ஆஸ்டரின் புதிய விலைகள்
ஆஸ்டரின் ஆரம்ப விலை ரூ. 10.82 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் டாப்-ஸ்பெக் மாறுபாட்டிற்கு ரூ. 18.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). ஹவானா க்ரே ஷேடின் அறிமுகம் விலையில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை.
ஆஸ்டர் இன்ஜின் விருப்பங்கள்
எம்ஜி ஆஸ்டர் 1.5-லிட்டர் பெட்ரோல் நேச்சுரலி அஸ்பிரெடெட் மற்றும் 1.3-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்ஸால் இயக்கப்படுகிறது. இதன் 1.5 லிட்டர் இன்ஜின் 108bhp மற்றும் 1.3 லிட்டர் இன்ஜின் 138bhp பவரை வெளியிடுகிறது. 1.5 லிட்டர் மில் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் அல்லது சிவிடீ கியர்பாக்ஸுடன் இருக்கலாம். இதற்கிடையில், டர்போ பெட்ரோல் இன்ஜின் சிக்ஸ்-ஸ்பீட் டோர்க் கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்