- ஃப்ரண்ட்டில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது
- இது முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட பிளாக் கேபினைப் பெறுகிறது
எம்ஜி இந்தியா நிறுவனம் விரைவில் ஆஸ்டர் ஃபேஸ்லிஃப்டை நாட்டில் அறிமுகப்படுத்த உள்ளது. இப்போது அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பே, இந்த மிட்-சைஸ் எஸ்யுவியின் லூக் வெளிப்படுத்தப்பட்டுள்ளது, இதில் அதன் இன்டீரியர் உடன் எக்ஸ்டீரியர் டிசைனையும் வெளிப்படுத்தியுள்ளது.
படங்களில் காணப்படுவது போல, புதுப்பிக்கப்பட்ட எம்ஜி ஆஸ்டரில் புதிய வண்ணம் சேர்க்கப்படும். டிஆர்எல்களுடன் கூடிய மெலிதான எல்இடி ஹெட்லேம்ப்ஸ், டைமண்ட் டிசைனுடன் கூடிய புதிய கிரில், பெரிய ஏர் டேம்களுடன் கூடிய வலுவான பம்பர், ஃப்ரண்ட் கேமரா மற்றும் ப்ளூ நிற அக்ஸ்ன்ட்ஸ் இருப்பதால் இது ஒரு ஹைப்ரிட் மாடலாக இருக்கலாம்.
அதன் சைட்டில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, இதில் பிளாக்-அவுட் பில்லர்ஸ், ரூஃப் மற்றும் ஓஆர்விஎம்ஸ் ஆகியவை அடங்கும். கூடுதலாக, சில்வர் ஃபினிஷ்ட் ரூஃப் ரெயில்ஸுடன் ஸ்கிட் ப்ளேட்டில் சில்வர் அக்ஸ்ன்ட்ஸ் உள்ளன. ஆஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் டூயல்-டோன் ஃபினிஷுடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட அலோய் வீல்களையும் பெறும்.
ரியரில், புதிதாக வடிவமைக்கப்பட்ட எல்இடி டெயில்லேம்ப்கள், பம்பரில் சில்வர் அலங்காரம், வாஷருடன் ரியர் வைப்பர், ஹை-மவுண்டேட் ஸ்டாப் லைட் மற்றும் ஷார்க் ஃபின் ஆண்டெனாவுடன் எக்ஸ்டென்டெட் ரூஃப் ஸ்பாய்லர் ஆகியவை உள்ளன.
இன்டீரியர் ஸ்பை படங்களில், புதிய டாஷ்போர்டுடன் கூடிய பெரிய இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் ஃபங்ஷனுடன் கூடிய ஸ்டீயரிங் வீலுடன் ஃபுல் பிளாக் தீம்மை இது காட்டுகின்றன. சிறிய கியர் செலக்டர் லெவர், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் வயர்லெஸ் சார்ஜர் ஆகியவற்றைப் பெற்றிருக்கும் புதிய சென்டர் கன்சோலில் உள்ள மிகப்பெரிய மாற்றமாகும்.
தற்போது, அதன் இன்ஜின் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. எவ்வாறாயினும், புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஆஸ்டர், சிறந்த ஃபியூல்எஃபிஷியன்சி மற்றும் பர்ஃபார்மன்ஸ்காக ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் ஏற்கனவே உள்ள மாடலின் இன்ஜின் விருப்பங்களுடன் தொடரும் என்று எதிர்பார்க்கிறோம்.
எம்ஜி ஆஸ்டர் ஃபேஸ்லிஃப்ட்டின் வருகைக்குப் பிறகு, இது மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் ஹோண்டா எலிவேட் போன்ற மிட்-சைஸ் எஸ்யுவிகளுடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்