- செவன்த்-ஜெனரேஷன் SL ரோட்ஸ்டர் இந்தியாவில் அறிமுகமானது
- சாஃப்ட்-டாப் 15 வினாடிகளில் திறக்க அல்லது மூடப்படலாம்
மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனம் SL55 ஏஎம்ஜி ரோட்ஸ்டரை நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் விலை ரூ.2.35 கோடி (எக்ஸ்-ஷோரூம்). 2021 ஆம் ஆண்டில் க்ளோபல் மார்க்கெட்டில் வெளியிடப்பட்ட செவன்த்-ஜெனரேஷன் மாடல், இது சிபியு வழியாக நாட்டில் வந்தது. இந்த பர்ஃபார்மன்ஸ் கார் இரண்டு ட்ரிம் லெவல்ஸிலும் மற்றும் எட்டு எக்ஸ்டீரியர் பெயிண்ட் விருப்பங்களில் கிடைக்கிறது.
மெர்சிடிஸ்-ஏஎம்ஜி SL55 ரோட்ஸ்டரின் டிசைன்
SL55 ஏஎம்ஜி ரோட்ஸ்டரின் எக்ஸ்டீரியர் சிறப்பம்சங்களில், ஸ்வெப்ட்பேக் எல்இடி ஹெட்லேம்ப்ஸ், பனமெரிகானா கிரில், க்லோஸ் பிளாக் ஓஆர்விஎம்ஸ், புதிய பிளாக்-அவுட் 20-இன்ச் அலோய் வீல்ஸ் (21-இன்ச் ஆப்ஷனல்), ரெட் அல்லது எல்லோ நிற ப்ரேக் காலிப்பர்ஸ், குவாட்-டிப் எக்ஸாஸ்ட்ஸ், அட்ஜஸ்ட்டெபல் எக்ஸாஸ்ட்ஸ், ஸ்பாய்லர், மற்றும் ரேப்பரவுண்ட் எல்இடி டெயில் லைட்ஸ் ஆகியவை இதில் அடங்கும். இந்த மாடலின் சாஃப்ட்-டாப்பை 15 வினாடிகளில் திறக்கவும் அல்லது மூடவும் இது வடிவமைக்கபட்டிருக்கு, இது ஒரு மணி நேரத்திற்கு 60 கி.மீ ஸ்பீடைஅடையும் மற்றும் பிளாக், க்ரே மற்றும் ரெட் வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.
நியூ SL55 ஏஎம்ஜியின் இன்டீரியர் மற்றும் ஃபீச்சர்ஸ்
மெர்சிடிஸ்-ஏஎம்ஜி SL55 ரோட்ஸ்டர்இன்டீரியரில், ஏஎம்ஜி பர்ஃபார்மன்ஸ் சீட்ஸ், சுற்றிலும் கார்பன்-ஃபைபர் மற்றும் உட்புறம் முழுவதும் அல்காண்டரா இன்சர்ட்ஸ், ஏஎம்ஜி-குறிப்பிட்ட எலிமெண்ட்ஸ், ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், 11.9-இன்ச் வெர்டிகல்லிசீரமைக்கப்பட்ட டில்டேபல் எம்பியுஎக்ஸ் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட்டிங் மற்றும் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே ஆகியவை அடங்கும்.
இந்த SL55 ஏஎம்ஜி ஆனது 8 ஏர்பேக்ஸ், ப்ரீ சேஃப் சிஸ்டம், பெடெஸ்ட்ரியன் ப்ரொடெக்க்ஷன், ஆக்டிவ் லேன் கீப் அசிஸ்ட் மற்றும் பல பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.
SL55 ஏஎம்ஜிரோட்ஸ்டரின்இன்ஜின் மற்றும் விவரக்குறிப்புகள்
SL55 ஏஎம்ஜி ரோட்ஸ்டரானது 4.0 லிட்டர், ட்வின்-டர்போ V8 இன்ஜின் மூலம் 473bhp மற்றும் 700Nm டோர்க்கை உருவாக்குகிறது. நைன் -ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இது இணைக்கப்பட்டிருக்கும், இதில் சாஃப்ட்-டாப் கன்வெர்ட்டிபிள், ஒரு மணி நேரத்திற்கு 100 கி.மீ ஸ்பீடை 3.9 வினாடிகளில் எட்டிவிடும், இது எலக்ட்ரோனிக் முறையில் வரையறுக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்கு 295 கி.மீ டாப்- ஸ்பீட் வரை செல்லும்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்