- முழு GLE மாடல்களும் இனி ஏஎம்ஜி வேரியன்ட்ஸில் கிடைக்கும்
- புதிய வேரியன்ட்ஸ் 2.0 லிட்டர், ஃபோர்-சிலிண்டர் டீசல் இன்ஜினுடன் வருகிறது
மெர்சிடிஸ்-பென்ஸ் GLE300d வேரியன்ட் AMG வரிசையுடன் ரூ. 97.85 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய அறிமுகத்துடன், இது GLE 300d ஸ்டாண்டர்ட் வெர்ஷனாக மாற்றும். மேலும், GLE வரம்பில் உள்ள அனைத்து மாடல்களும் இப்போது AMG லைன் கிட் உடன் வழங்கப்படுகின்றன
தற்போதைய வெர்ஷனோடு ஒப்பிடும்போது, புதிய GLE 300d ஏஎம்ஜி வரிசையானது 20-இன்ச் ஃபைவ்-ஸ்போக் அலோய் வீல்ஸ் ட்ரெமோலைட் கிரே வண்ணம், பெரிய பிரேக்குகள், புதிய டைமண்ட் கிரில் டிசைன், ட்வீக்ட் ஃபேஷியா மற்றும் பாடி நிறமுள்ள ஃப்ரண்ட் மற்றும் ரியர் விங் ஃப்ளேர் உட்பட பல்வேறு அம்ச மாற்றங்களுடன் வருகிறது. இன்டீரியரில், கார் சமீபத்திய எம்பக்ஸ் சிஸ்டம் மற்றும் 13-ஸ்பீக்கர் பர்மெஸ்டர் ம்யூசிக் சிஸ்டம் போன்ற அம்சங்களுடன் வருகிறது.
காரின் மிக முக்கியமான பகுதியான இன்ஜினைப் பொறுத்தவரை, 2024 மெர்சிடிஸ்-பென்ஸ் GLE300d ஏஎம்ஜி 2.0 லிட்டர், ஃபோர்-சிலிண்டர் டீசல் இன்ஜினுடன் 269bhp மற்றும் 550Nm டோர்க்கையும் உற்பத்தி செய்கிறது. மேலும், இது ஐஎஸ்சி தொழில்நுட்பத்துடன் கூடிய மைல்ட்-ஹைப்ரிட் சிஸ்டமை பெறுகிறது, இது கூடுதல் 20bhp மற்றும் 220Nm டோர்க்கையும் உற்பத்தி செய்ய இன்ஜினை அதிகரிக்கிறது. நைன்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மூலம் வீல்ஸ்க்கு பவரை வழங்குகிறது. இந்த கார் 0-100 கிமீ வேகத்தை வெறும் 6.9 வினாடிகளில் எட்டிவிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்