- புதிய EQA ஃபுல்லி லோடெட் வேரியன்ட்டில் கிடைக்கிறது
- முழுமையாக சார்ஜ் செய்தால் 560 கிமீ தூரம் வரை செல்லும் என்று மெர்சிடிஸ் கூறுகிறது
மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் அதன் மிக மலிவு விலையில் EQA என்ற எலக்ட்ரிக் எஸ்யுவியை இந்தியாவில் ரூ. 66.00 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடல் GLA இன் எலக்ட்ரிக் வெர்ஷனாகும், மேலும் இது EQA 250+ என்ற சிங்கிள் ஃபுல்லி லோடெட் வேரியன்ட்டில் வழங்கப்படுகிறது.
டிசைனைப் பொறுத்தவரை, புதிய EQA ஆனது ஃப்ரண்ட் மற்றும் ரியரில் எல்இடிலைட் பார்ஸ், மூன்று புள்ளிகள் கொண்ட நட்சத்திர வடிவத்துடன் கூடிய புதிய கிரில், 19-இன்ச் அலோய் வீல்ஸ் மற்றும் ரேப்பரவுண்ட் எல்இடிடெயில்லைட்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இது போலார் ஒயிட், ஹைடெக் சில்வர், காஸ்மோஸ் பிளாக், மவுண்டன் கிரே, ஸ்பெக்ட்ரல் ப்ளூ, படகோனியா ரெட் மற்றும் மவுண்டன் கிரே மேக்னோ ஆகிய ஏழு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.
அம்சங்களைப் பற்றி பேசுகையில், மெர்சிடிஸ் EQA இல் 360 டிகிரி கேமரா, எச்யுடி, ஜெஸ்ச்சர் கன்ட்ரோல், டூயல்-ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், எலக்ட்ரிகள்ளி அட்ஜஸ்ட்டெபல் டெயில்கேட், நான்கு டிரைவ் மோட்ஸ், பனோரமிக் சன்ரூஃப், இரண்டு 10.25-இன்ச் ஸ்கிரீன் மற்றும் ஏழு ஏர்பேக்ஸ் உள்ளன.
2024 EQA ஆனது 70.5kWh பேட்டரி பேக்கைக் கொண்டுள்ளது, இது ஒரு எலக்ட்ரிக் மோட்டாருடன் வருகிறது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 560 கிமீ தூரம் வரை செல்லும் என்று நிறுவனம் கூறுகிறது. இதன் இன்ஜின் 188bhp பவரையும், 385Nm டோர்க் திறனையும் உருவாக்குகிறது.
11kW ஏசி சார்ஜிங் வழியாக 0-100 சதவிகிதம் EQA சார்ஜ் செய்ய ஏழு மணி நேரம் 15 நிமிடங்கள் ஆகும், அதே நேரத்தில் 100kW டிசி சார்ஜர் வழியாக 10-80 சதவிதம் சார்ஜ் செய்ய 35 நிமிடங்கள் மட்டுமே ஆகும். இந்தியாவில், EQA ஆனது பிஎம்டபிள்யூ iX1 மற்றும் வால்வோ XC40 ரீசார்ஜ் ஆகியவற்றுடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்