- 2024 முதல் காலாண்டில் மாருதி 1.38 லட்சம் சிஎன்ஜி கார்களை விற்பனை செய்தது
- மாருதி இந்தியாவில் 12 சிஎன்ஜி மாடல்களை விற்பனை செய்து வருகிறது
மாருதி சுஸுகியின் சில கார் மாடல்களுக்கான தேவை இன்னும் அதிகமாகவே உள்ளது. கார் தயாரிப்பாளரிடம் தற்போது எந்த மாடலிலும் இன்ஜின் இன்ஜின் ஆப்ஷன் இல்லை, அதே சமயம் ஏராளமான சிஎன்ஜி வெர்ஷன் உள்ளன, அதைச் சார்ந்து 12 மாடல்கள் உள்ளன.
ஜூலை 2024க்குள் மாருதி இன்னும் 43,000 எர்டிகா சிஎன்ஜி யூனிட்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்பதை அறிந்திருக்கிறோம். XL6, கிராண்ட் விட்டாரா, பிரெஸ்ஸா, ஃப்ரோன்க்ஸ், பலேனோ, டிசையர், வேகன் ஆர், செலிரியோ, ஈகோ, எஸ்-பிரஸ்ஸோ மற்றும் ஆல்டோ K10 போன்ற வாகன உற்பத்தியாளர் விற்பனை செய்யும் 12 சிஎன்ஜி மாடல்களில் எர்டிகாவும் ஒன்றாகும்.
எர்டிகா சிஎன்ஜி வெர்ஷன் VXi (O) மற்றும் ZXi (O) ஆகிய இரண்டு வேரியன்ட்ஸில் கிடைக்கிறது. இதில் 1.5-லிட்டர், ஃபோர்-சிலிண்டர், என்ஏ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது, ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மோடில், இது 102bhp மற்றும் 136Nm பவரை வெளியீடு செய்கிறது, அதே நேரத்தில் சிஎன்ஜி மோடில் இது 87bhp மற்றும் 121Nm ஆக குறைகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்