- மூன்று வேரியன்ட்ஸில் வழங்கப்படுகிறது
- பல அம்சங்கள் மற்றும் காஸ்மெட்டிக் புதுப்பிப்புகளைப் பெறுகிறது
மாருதி சுஸுகி வேகன்-ஆர் வரிசையில் புதிய ஸ்பெஷல் எடிஷன்னை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆரம்ப விலையான ரூ. 5.65 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கும், இது வேகன் ஆர் வால்ட்ஸ் லிமிடெட் எடிஷன் என்று அழைக்கப்படுகிறது. இந்த புதிய எடிஷனில் பல காஸ்மெட்டிக் அப்டேட் மற்றும் கூடுதல் அம்சங்களைப் பெறுகிறது
ஸ்டாண்டர்ட் வேகன் ஆர் உடன் ஒப்பிடும்போது, புதிய வால்ட்ஸ் லிமிடெட் எடிஷனில் ஃபாக் லைட்ஸ், வீல் ஆர்ச் கிளாடிங், பம்பர் ப்ரொடக்டர்கள், ஃப்ரண்ட் குரோம் கிரில், ஃபாக் லைட் கார்னிஷ், சைட் ஸ்கர்ட்ஸ் மற்றும் பாடி சைட் மோல்டிங் ஆகியவை உள்ளன. இன்டீரியரில், புதிய ஃபுளோர் மேட்ஸ், ஸ்டைலிங் கிட், 6.2-இன்ச் டச்ஸ்கிரீன் மியூசிக் சிஸ்டம், செக்யூரிட்டி சிஸ்டம் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா ஆகியவற்றைப் பெறுகிறது. இந்த மாடலின் சில பாதுகாப்பு அம்சங்களில் டூயல் ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், இஎஸ்சி மற்றும் ஹில் ஹோல்ட் கன்ட்ரோல் ஆகியவை அடங்கும்.
குறிப்பிடத்தக்க வகையில், மாருதி வேகன் ஆர் வால்ட்ஸ் லிமிடெட் எடிஷன் Lxi, VXi மற்றும் ZXi ஆகிய மூன்று வேரியன்ட்ஸில் வழங்கப்படுகிறது. இது 1.0-லிட்டர் மற்றும் 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜின்களுடன் மேனுவல் மற்றும் ஏஎம்டீ (மாருதியின் ஏஜிஎஸ்) டிரான்ஸ்மிஷன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்