- இது இரண்டு பெட்ரோல் இன்ஜின் வேரியண்ட்ஸில் வழங்கப்படுகிறது
- மாருதி வேகன் ஆர் கோயம்புத்தூர் மற்றும் புதுச்சேரியில் குறைந்த விலையில் கிடைக்கின்றன
வேகன் ஆர் பல ஆண்டுகளாக மாருதி சுஸுகியின் பிரபலமான ஹேட்ச்பேக் ஆக இருந்துவருகின்றன. மாருதி சுஸுகி பிப்ரவரி 2022 இல் ஹார்டெக்ட் பிளாட்பார்ம் அடிப்படையாகக் கொண்ட மேம்படுத்தப்பட்ட வேகன் ஆர் மாடலை அறிமுகப்படுத்தியது. சமீபத்தில், வேகன் ஆர் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து 3 மில்லியன் யூனிட்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.
மாருதி சுஸுகி வேகன் ஆர் ஆன்ரோடு விலை:
மாருதி சுஸுகி வேகன் ஆர் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக நாட்டில் அதிகம் விற்பனையாகும் கார் என்பதை உங்களுக்குச் சொல்லுகிறோம். வேகன் ஆர் ஆனது LXi, VXi, ZXi மற்றும் ZXi பிளஸ் ஆகிய நான்கு வகைகளில் வழங்கப்படுகிறது. அதேசமயம் சிஎன்ஜி வெர்ஷனில் LXi மற்றும் VXi வேரியண்ட்ஸில் கிடைக்கிறது. 2023 ஆம் ஆண்டின் தமிழ்நாட்டில் உள்ள டாப் 10 நகரங்களில் மாருதி சுஸுகி வேகன் ஆர்’ரின் ஆன் ரோடு விலை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நகரம் | பேஸ் வேரியண்டின் விலை | டாப் வேரியண்டின் விலை |
சென்னை | ரூ. 6.47 லட்சம் | ரூ. 8.67 லட்சம் |
கோயம்புத்தூர் | ரூ. 6.40 லட்சம் | ரூ. 8.58 லட்சம் |
மதுரை | ரூ. 6.46 லட்சம் | ரூ. 8.66 லட்சம் |
திருச்சி | ரூ. 6.46 லட்சம் | ரூ. 8.66 லட்சம் |
சேலம் | ரூ. 6.46 லட்சம் | ரூ. 8.66 லட்சம் |
புதுச்சேரி | ரூ. 5.55 லட்சம் | ரூ. 7.43 லட்சம் |
வேலூர் | ரூ. 6.46 லட்சம் | ரூ. 8.66 லட்சம் |
தூத்துக்குடி | ரூ. 6.46 லட்சம் | ரூ. 8.66 லட்சம் |
திருப்பூர் | ரூ. 6.46 லட்சம் | ரூ. 8.66 லட்சம் |
ஈரோடு | ரூ. 6.46 லட்சம் | ரூ. 8.66 லட்சம் |
மாருதி வேகன் ஆர் இன்ஜின்ஸ் மற்றும் அம்சங்கள்:
வேகன் ஆர் மாடலில் இரண்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்ஸில் வழங்கப்படுகிறது. இதன் 1.0-லிட்டர் நெக்ஸ்ட் ஜெனரேஷனின் சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் ஆகும், இது 66bhp மற்றும் 89Nm டோர்க்கை உற்பத்தி செய்யும். இரண்டாவது 1.2-லிட்டர் அட்வான்ஸ் கே-சீரிஸ் டூயல் ஜெட் பெட்ரோல் இன்ஜின், இது 89bhp மற்றும் 113Nm டோர்க்கை உருவாக்குகிறது. வேகன் ஆர் இந்த இரண்டு இன்ஜின்ஸும் மேனுவல் மற்றும் ஏஜிஎஸ் ஆப்ஷன்ஸில் கிடைக்கின்றன. அதே நேரத்தில், அதன் 1.0-லிட்டர் சிஎன்ஜி இன்ஜின் 52bhp மற்றும் 82Nm டோர்க்கையும் உருவாக்குகிறது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த இன்ஜின்ஸ் இப்போது BS6 ஃபேஸ் 2 மற்றும் ஆர்டிஇ விதிமுறைக்கு இணக்கமாக உள்ளன.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்