- இந்தியாவில் புதிய ஸ்விஃப்ட் விலை ரூ. 6.49 லட்சம்
- புதிய டிசயர் சிஎன்ஜி வேரியன்ட்டில் வேலை செய்து வருகிறது
மாருதி சுஸுகி இந்த ஆண்டு மே மாதம் நாட்டில் புதிய ஜென் ஸ்விஃப்ட்டை அறிமுகப்படுத்தியது, இதன் விலை ரூ. 6.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இரண்டு மாதங்களுக்குள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இந்த மாடல் சமீபத்தில் 35,000 யூனிட்களுக்கு மேல் விற்பனையாகியுள்ளது.
மாருதி ஸ்விஃப்ட்டின் வெயிட்டிங் பீரியட்டை நாங்கள் இப்போது பெற்றுள்ளோம். ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் மற்றும் டாடா பஞ்ச் போன்றவற்றுக்கு போட்டியாக இருக்கும் இந்த ப்ரீமியம் ஹேட்ச்பேக், முன்பதிவு செய்த நாளிலிருந்து மூன்று வாரங்கள் வரை காத்திருக்கும் காலத்தை கட்டளையிடுகிறது. இது இடம், வேரியன்ட் மற்றும் வண்ணத்தின் தேர்வு மற்றும் பல விவரங்களின் அடிப்படையில் மேற்கூறிய வெயிட்டிங் பீரியட் மாறுபடும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மாருதி ஸ்விஃப்ட்டின் தற்போதைய ஜெனரேஷன் 1.2 லிட்டர், த்ரீ சிலிண்டர், Z12E பெட்ரோல் இன்ஜின் மூலம் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் அல்லது ஏஎம்டீ யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. 80bhp மற்றும் 112Nm டோர்க் திறனை வழங்கும் இந்த மோட்டார், 25.75kmpl வரை மைலேஜை வழங்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், கார் தயாரிப்பாளர் அடுத்த ஜென் டிசையர் மற்றும் ஸ்விஃப்ட்டின் சிஎன்ஜி வேரியன்ட் ஆகியவற்றில் பணிபுரிந்து வருகிறார், இவை இரண்டும் வரும் மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்