- மூன்று வேரியன்ட்ஸில் கிடைக்கும்
- கிலோவுக்கு 32.85 கிமீ மைலேஜ் தரும்
மாருதி சுஸுகி இந்தியாவில் மக்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய ஸ்விஃப்ட்டின் சிஎன்ஜி வெர்ஷன்னை ரூ. 8.19 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஹேட்ச்பேக்கின் இந்தப் புதிய வெர்ஷன் அக்டோபர் 12, 2024 முதல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.
வேரியன்ட்ஸைப் பற்றி பேசுகையில், புதிய மாருதி ஸ்விஃப்ட் சிஎன்ஜிக்கு VXi, VXi(O), மற்றும் ZXi ஆகிய மூன்று வேரியன்ட்ஸில் உள்ளது. இது 80bhp மற்றும் 112Nm டோர்க்கை உற்பத்தி செய்யும் 1.2-லிட்டர், த்ரீ-சிலிண்டர், என்ஏ பெட்ரோல் இன்ஜினைக் கொண்டுள்ளது. அதுவே சிஎன்ஜி மோடில், இந்த கார் 69bhp மற்றும் 102Nm ஆக குறைகிறது. முந்தைய ஜெனரேஷன் ஸ்விஃப்ட்டை விட 6 சதவீதம் கூடுதலாக அதாவது கிலோவுக்கு 32.85 கிமீ மைலேஜ் தருவதாக கூறுவது இதன் சிறப்பு.
தற்போது பிராண்டின் 14 வது சிஎன்ஜி மாடலாக இருக்கும் ஸ்விஃப்ட், டிசைன் மற்றும் அம்சங்களின் பட்டியலுக்கு வரும்போது அதில் எந்த மாற்றமும் இல்லை. இதில் எல்இடி ஃபாக் லைட்ஸ், எல்இடி புரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், எல்இடி டெயில்லைட்ஸ், 15 இன்ச் அலோய் வீல்ஸ், ஒன்பது இன்ச் டச்ஸ்கிரீன் சிஸ்டம், ஆட்டோமேடிக் க்ளைமேட் கன்ட்ரோல், ரியர் ஏசி வென்ட்ஸ் மற்றும் ஓடிஏ (OTA) அப்டேட்ஸ் ஆகியவை இதில் உள்ள சில சிறப்பம்சங்கள் ஆகும்.
மாருதி ஸ்விஃப்ட் சிஎன்ஜி வேரியன்ட்ஸ் வாரியான எக்ஸ்-ஷோரூம் விலைகள் கீழே பட்டியலிட்டுள்ளோம்:
வேரியன்ட்ஸ் | விலை |
VXi சிஎன்ஜி | ரூ. 8.19 லட்சம் |
VXi (O) சிஎன்ஜி | ரூ. 8.46 லட்சம் |
ZXi சிஎன்ஜி | ரூ. 9.19 லட்சம் |