- எர்டிகாவுக்கு அதிக வெயிட்டிங் பீரியட் உள்ளது
- ெமிகண்டக்டர் சப்ளையில் அதிகரிப்பு
2023-24 நிதியாண்டில் நவம்பர் மாதம் வரை டெலிவரி செய்ய சுமார் 2.08 லட்சம் யூனிட்டின் ஆர்டர்கள் மீதமுள்ளதாக மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது. கடந்த மாதம், கார் தயாரிப்பு நிறுவனம் 1.73 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்ஸை உற்பத்தி செய்தது, அதில் மினி மற்றும் காம்பாக்ட் எஸ்யுவி செக்மெண்ட்டில் 1.04 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்ஸ் கொண்டிருந்தன.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மாருதி சுஸுகியின் 3.55 லட்சம் வாகனங்களுக்கான ஆர்டர்கள் இன்னும் டெலிவரி செய்யப்படாத பற்றி இப்போது பேசலாம். இவற்றில், எர்டிகா 93,000 யூனிட் முன்பதிவுகளுடன் முதலிடத்தில், பிரெஸ்ஸா 48,000 யூனிட்ஸும் மற்றும் கிராண்ட் விட்டாரா 27,000 ஆர்டர்களுடன் இன்னும் டெலிவரி செய்யப்படவில்லை.
செப்டம்பர் 2023 இல், மாருதி சிஎன்ஜி தொடர்பான பாகங்கள் மற்றும் செமிகண்டக்டரை அதிகரித்தது மற்றும் எர்டிகா, பிரெஸ்ஸா, ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் உள்ளிட்ட அதன் கார்களில் நீண்ட வெயிட்டிங் பீரியட்டை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. இதன் காரணமாக, எர்டிகாவின் நீண்ட வெயிட்டிங் பீரியட் முந்தைய காலாண்டை விட தற்போது பாதியாக குறைந்துள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்