- வேகன் ஆர் நான்கு வேரியண்ட்ஸில் வழங்கப்படுகிறது
- பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வெர்ஷன்ஸில் கிடைக்கும்
மாருதி சுஸுகி வேகன் ஆர் இன் டாப்-ஸ்பெக் வேரியண்ட்டிலிருந்து ஒரு அம்சத்தை நீக்கியுள்ளது. தற்போது, LXi, VXi, ZXi மற்றும் ZXi ப்ளஸ் ஆகிய நான்கு வேரியண்ட்ஸில் ஹேட்ச்பேக் இரண்டு இன்ஜின் விருப்பங்களுடன் வழங்கப்படுகிறது. இந்த மாடல் இந்தியாவில், ஆரம்ப விலையில் ரூ.5.54 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).
மாருதி வேகன் ஆர் இன் நீக்கப்பட்ட ஃபீச்சர்
கார் தயாரிப்பாளர் வேகன் ஆர் இன் உபகரணப் பட்டியலில் இருந்து ரியர் டிஃபாகர் ஃபங்ஷனை நீக்கியுள்ளார். இந்த அம்சம் டாப்-ஸ்பெக் ZXi ப்ளஸ் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்ஸுடன் வழங்கப்பட்டது. இந்த அம்சத்தை நீக்கியதைத் தவிர, வேகன் ஆர் அம்சங்கள் பட்டியலில் வேறு எதுவும் மாற்றப்படவில்லை.
மாருதி வேகன் ஆர் இன்ஜின் மற்றும் விவரக்குறிப்புகள்
வேகன் ஆர் 1.2-லிட்டர் மற்றும் 1.0-லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜின்ஸுடன் பெறலாம். பெட்ரோல் வேரியண்ட் 89bhp மற்றும் 113Nm டோர்க்கை உற்பத்தி செய்ய டியூன் செய்யப்பட்டுள்ளது, சிஎன்ஜி வேரியண்ட் 66bhp மற்றும் 89Nm பீக் டோர்க்கை வெளிப்படுத்தும். டிரான்ஸ்மிஷனில் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏஎம்டீ (ஏஜிஎஸ்) யூனிட் மூலம் இயங்கப்படுகிறது. மேலும், 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் நிறுவனத்தால் பொருத்தப்பட்ட சிஎன்ஜி கிட்டின் விருப்பத்தையும் பெறுகிறது.
மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் வேரியண்ட் வாரியான எக்ஸ்-ஷோரூம் விலைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது:
LXi 1.0 | ரூ. 5.54 லட்சம் |
VXi 1.0 | ரூ. 5.99 லட்சம் |
ZXi 1.2 | ரூ. 6.28 லட்சம் |
LXi 1.0 சிஎன்ஜி | ரூ. 6.44 லட்சம் |
VXi 1.0 ஏஜிஎஸ் | ரூ. 6.54 லட்சம் |
ZXi ப்ளஸ் 1.2 | ரூ. 6.75 லட்சம் |
ZXi 1.2 சிஎன்ஜி | ரூ. 6.83 லட்சம் |
VXi 1.0 சிஎன்ஜி | ரூ. 6.89 லட்சம் |
ZXi ப்ளஸ் 1.2 டூயல் டோன் | ரூ. 6.87 லட்சம் |
ZXi ப்ளஸ் 1.2 ஏஜிஎஸ் | ரூ. 7.30 லட்சம் |
ZXi ப்ளஸ் 1.2 ஏஜிஎஸ்டூயல் டோன் | ரூ. 7.42 லட்சம் |
மாருதி சுஸுகி பிரெஸ்ஸா ஃபீச்சர்ஸ் மறுசீரமைக்கப்பட்டது
சமீபத்தில், கார் தயாரிப்பாளர் பிரெஸ்ஸா எஸ்யுவியின் அம்சப் பட்டியலையும் திருத்தியது. மாடலின் மைல்ட்-ஹைப்ரிட் டெக் மேனுவல் வெர்ஷன்ஸில் இருந்து நீக்கியது.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்