- இது அடுத்த ஆண்டு அறிமுகமாகும்
- இந்தியாவின் முதல் ஃப்ளெக்ஸ் ஃப்யூல் காராக இருக்கும்
மாருதி சுஸுகி வேகன் ஆர் ஃப்ளெக்ஸ் ஃப்யூல்லை பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2024 இல் காட்சிப்படுத்தியுள்ளது. முன்னதாக, டெல்லியில் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் இது முதன்முறையாகக் காணப்பட்டது, இது 2025 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படலாம்.
வேகன் ஆர் ஃப்ளெக்ஸ் ஃப்யூல் எத்தனால்-பெட்ரோல் கலவையைப் பயன்படுத்துகிறது, இது டெயில்பைப் எமிஷனைக் குறைக்க உதவும். இருப்பினும், காட்சிப்படுத்தப்பட்ட மாடல் ஸ்டாண்டர்ட் வேகன் ஆர் போன்றது ஆனால் 'ஃப்ளெக்ஸ் ஃப்யூல்' விருப்பத்தைக் கொண்டுள்ளது. மேலும், அதன் இன்டீரியரில் பல காஸ்மெட்டிக் மேம்படுத்தல்கள் செய்யப்படும்.
தற்போதைய மாடலைப் போலவே, இது 1.2-லிட்டர் என்ஏ, ஃபோர் சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினைக் கொண்டிருக்கலாம், இது 88.5bhp மற்றும் 113Nm டோர்க்கையும் உருவாக்குகிறது. ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஸ்டாண்டர்டாக எல்லா வேரியன்ட்ஸிலும் சேர்க்கப்படலாம், அதே நேரத்தில் ஒரு ஆட்டோமேட்டிக் வேரியன்ட்டையும் லான்சின் பொது வழங்கப்படலாம். ஃப்ளெக்ஸ் ஃப்யூல் வேகன் ஆர் ஆனது 20 சதவிகிதம் (E20) முதல் 85 சதவிகிதம் (E85) எத்தனால் கலவையில் இயங்கக்கூடியது. இதில் 15 சதவீதம் பெட்ரோல் மற்றும் 85 சதவீதம் எத்தனால் இருக்கும்.
இதில், ஃப்ளெக்ஸ் ஃப்யூல் சரியாக வேலை செய்கிறதா என்பதை அறிய எத்தனால் சென்சார்கள், கோல்ட் ஸ்டார்ட் அஸ்சிஸ்டன்ஸ் ஹீட்டெட் ஃப்யூல் ரெயில்ஸ் மற்றும் மேம்படுத்தப்பட்ட இன்ஜின் மேலாண்மை அமைப்பு தவிர ஃப்யூல் பம்ப் மற்றும் இன்ஜெக்டர்ஸ் போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டன.
வேகன் ஆர் ஃப்ளெக்ஸ் ஃப்யூல் ப்ரொடக்ஷன் வெர்ஷன் 2025 முதல் விற்பனைக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும், இது நிலையான மாடலை விட சற்று விலை உயர்ந்ததாக இருக்கலாம் மற்றும் இது இந்தியாவின் முதல் ஃப்ளெக்ஸ் ஃப்யூல் காராக இருக்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்