- வேகன் ஆர் நான்கு வேரியண்ட்ஸில் வழங்கப்படும்
- இராண்டு இன்ஜின் விருபங்களில் பெறலாம்
மாருதி சுஸுகி வேகன் ஆர் ஆனது ஆகஸ்ட் 2023 இல் ரூ.54,000 வரை தள்ளுபடியை அறிவித்தது. இந்த நன்மை கேஷ் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் சலுகை போன்ற வடிவில் பெறலாம். தற்போது, இந்த ஹேட்ச்பேக் நான்கு வேரியண்ட்ஸில் ரூ.5.54 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் வழங்கப்படுகிறது.
மாருதி வேகன் ஆர் வேரியண்ட்ஸ் மற்றும் தள்ளுபடிகள்
LXi, VXi, ZXi, மற்றும் ZXi ப்ளஸ் போன்ற ட்ரிம்ஸில் வேகன் ஆர் கிடைக்கும். தள்ளுபடி பொறுத்தவரை, பெட்ரோல் மேனுவல் வேரியண்ட்ஸில் ரூ.25,000 வரை கேஷ் தள்ளுபடி, ரூ. 20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.4,000 கார்ப்பரேட் தள்ளுபடியை வழங்குகிறது. மறுபுறம், சிஎன்ஜி மற்றும் ஏஎம்டீ வெர்ஷன்ஸ்க்கு ஸ்டாண்டர்ட் எக்ஸ்சேஞ்ச் போனஸாக ரூ.30,000 மற்றும் கார்ப்பரேட் போனஸாக ரூ.15,000 வரை தள்ளுபடியை வழங்குகிறது.
தள்ளுபடிகள் | தொகை |
பெட்ரோல் எம்டீ கேஷ் தள்ளுபடி | ரூ. 25,000 வரை |
பெட்ரோல் ஏஎம்டீ கேஷ் தள்ளுபடி | ரூ. 15,000 வரை |
சிஎன்ஜி கேஷ் தள்ளுபடி | ரூ. 30,000 வரை |
எக்ஸ்சேஞ்ச் போனஸ் | ரூ. 20,000 வரை |
கார்ப்பரேட் போனஸ் | ரூ. 4,000 |
மாருதி சுஸுகி வேகன் ஆர் இன்ஜின் விருபங்கள்
வேகன் ஆர் 1.0 லிட்டர் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்ஸில் வழகப்படும். இதில் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினை ஃபேக்டரி-பொருத்தப்பட்ட சிஎன்ஜி கிட் ஆப்ஷனிலும் பெறலாம். டிரான்ஸ்மிஷனில் இது ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏஎம்டீ யூனிட்ஸுடன் வழங்கபடும்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்