- இது மைல்ட்-ஹைப்ரிட் டெக்னாலஜி உடன் வழங்கபடலாம்
- 2023 இன் இரண்டாம் பகுதியில் லான்ச் செய்யபடலாம்
டோக்கியோவில் 2023 ஜப்பான் மொபிலிட்டி ஷோவில் சுஸுகி புதிய தலைமுறை ஸ்விஃப்ட்டைக் காட்டியது. ஃபோர்த் ஜெனரேஷன் புதுப்பித்தலுடன், இந்த ஹேட்ச்பேக்கின் எக்ஸ்டீரியர் மற்றும் இன்டீரியரில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இப்போது இந்த ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக்கின் இன்ஜின் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
இன்டர்நேஷனல் மார்க்கெட்டில், சுஸுகி ஸ்விஃப்ட் புதிய 1.2 லிட்டர் த்ரீ சிலிண்டர் மைல்ட்-ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜினுடன் சிவிடீ கியர்பாக்ஸுடன் வழங்கப்படும். இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் போது, ஸ்விஃப்ட் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் புதிய சிவிடீ யூனிட்டுடன் இணைக்கப்பட்ட பெட்ரோல் இன்ஜினுடன் வழங்கப்படலாம்.
தற்போதைய மாடலில் 1.2 லிட்டர் கே சீரிஸ் இன்ஜின் உள்ளது, இது 89bhp மற்றும் 113Nm டோர்க்கையும் உருவாக்குகிறது.இதன் புதிய இன்ஜின் சுமார் 100bhp மற்றும் 150Nm டோர்க்கை ஜெனரேட் செய்யும். மாருதி விற்பனையை அதிகரிக்க, வரவிருக்கும் ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக்கில் ஒரு மைல்ட்-ஹைப்ரிட் இன்ஜினை வழங்க வேண்டும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்