- இந்த ஹேட்ச்பேக் முதன்முதலில் 2005 இல் அறிமுகப்படுத்தப்பட்டது
- தற்போது ஃபோர்த் ஜெனரேஷன் மாடலாக வழங்கப்படுகிறது ஸ்விஃப்ட்
மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் இந்திய வாகனத் துறையில் மிக முக்கியமான மற்றும் மிகவும் பிரபலமான மாடல்களில் ஒன்றாகும். ஸ்விஃப்ட்டின் ஃபர்ஸ்ட் ஜெனரேஷன் மாடல் 2005 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது, அதன்பின் ஃபோர்த் ஜெனரேஷன் வரை 30 லட்சம் யூனிட்களை விற்பனை செய்துள்ளதாக இந்திய வாகன உற்பத்தியாளர் அறிவித்தார்.
இந்த பிரபலமான ஹேட்ச்பேக் முதன்முதலில் மாருதியால் 2005 இல் அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் ஈர்க்கக்கூடிய விற்பனை சாதனையுடன், மாருதி நிறுவனம் 2013 இல் 10 லட்சம் ஸ்விஃப்ட் கார்களை விற்பனை செய்து புதிய மைல்கல்லை உருவாக்கியது. 2018 இல், இந்த விற்பனை எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்து 20 லட்சமாக இருந்தது. அதன்பிறகு, ஸ்விஃப்ட் இப்போது அதன் ஃபோர்த் ஜெனரேஷன் மூலம் 30 லட்சம் விற்பனையை எட்டியுள்ளது மற்றும் இந்தியாவில் மறுக்கமுடியாத மாடலாக மாறியுள்ளது.
ஃபோர்த் ஜெனரேஷன் ஸ்விஃப்ட் இந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இந்த மாடல் தற்போது ரூ. 6.49 லட்சம் எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலை விற்கப்படுகின்றன. புதிய ஸ்விஃப்ட் இப்போது முற்றிலும் புதிய இன்ஜினைப் பெற்றுள்ளது மற்றும் அதன் ஃபியூல் எஃபிஷியன்சியும் மேம்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, ஸ்விஃப்ட் இப்போது காரில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் ஒரு வசதியான டிரைவிங் அனுபவத்தை வழங்குகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்