- பல வேரியன்ட்ஸில் வழங்கப்படலாம்
- ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்படலாம்
2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, ஹேட்ச்பேக்கின் சிஎன்ஜி வெர்ஷன் வெளியீடு குறித்த ஊகங்கள் உள்ளன. புதிய மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் சிஎன்ஜியின் வெளியீட்டு குறித்த பிரத்யேக விவரங்கள் இப்போது எங்களிடம் உள்ளன.
எங்கள்க்கு கிடைத்த ஆதாரங்களின்படி, சிஎன்ஜியில் இயங்கும் ஸ்விஃப்ட் செப்டம்பர் 12 அன்று அறிமுகமாகுமாகலாம் மேலும் இது பல வேரியன்ட்ஸில் வழங்கப்படலாம். இயந்திரரீதியாக, புதிய Z-சீரிஸ் 1.2-லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜின், பூட்டின் உள்ளே வைக்கப்பட்டுள்ள 60-லிட்டர் சிஎன்ஜி டேங்குடன் இருக்கும். இந்த கட்டமைப்பில், ஸ்விஃப்ட் சிஎன்ஜி சுமார் 70bhp மற்றும் 100Nm டோர்க்கை உற்பத்தி செய்யும்.
ஃபியூல் எஃபிஷியன்சியின் புள்ளிவிவரங்களைப் பொறுத்தவரை, ஸ்விஃப்ட்டின் புதிய Z-சீரிஸ் இன்ஜின் லிட்டருக்கு 24.8 கிமீ மைலேஜை வழங்குவதாகக் கூறப்படுகிறது. சிஎன்ஜி வெர்ஷனில், ஸ்விஃப்ட் கிலோவுக்கு 30 கிமீ மைலேஜை வழங்கலாம். குறிப்பிடத்தக்க வகையில், முந்தைய ஜெனரேஷன் ஸ்விஃப்ட் சிஎன்ஜி கிலோவுக்கு 30.9 கிமீ மைலேஜைக் கொண்டிருந்தது.
அறிமுகப்படுத்தப்பட்டவுடன், புதிய மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் சிஎன்ஜியின் பிரீமியம் ரூ. 60,000 முதல் ரூ. 80,000 வரை ஸ்டாண்டர்ட் வெர்ஷன்னை விட அதிகமாக இருக்கும். அறிமுகப்படுத்தப்பட்டதும், ஸ்விஃப்ட் சிஎன்ஜி இந்திய சந்தையில் ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் மற்றும் டாடா டியாகோ சிஎன்ஜி உடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்