- ரூ. 8.19 லட்சம் எக்ஸ்-ஷோரூம் ஆரம்ப விலையில் கிடைக்கின்றன
- 32.85 கிமீ/கிலோ மைலேஜை வழங்குகிறது
மாருதி சுஸுகி சமீபத்தில் அதன் சிஎன்ஜி போர்ட்ஃபோலியோவில் அதன் சமீபத்திய ஹேட்ச்பேக், ஸ்விஃப்ட்டைச் சேர்த்தது. புதிய ஸ்விஃப்ட் சிஎன்ஜி மூன்று வேரியன்ட்ஸில் கிடைக்கிறது, இதன் விலை ரூ. 8.19 லட்சத்தில் இருந்து ரூ. 9.19 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது. இப்போது, அதன் அறிமுகத்திற்குப் பிறகு, சிஎன்ஜி-பவர்ட் ஸ்விஃப்ட் நாடு முழுவதும் உள்ள மாருதி ஷோரூம்களை வந்து சேரா தொடங்கியுள்ளது.
மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி VXi, VXi (O), மற்றும் ZXi ஆகிய மூன்று வெர்ஷனில் கிடைக்கும். இதன் டாப் மாடலான ZXi வேரியன்ட்டில் எல்இடி லைட் செட்டப், 15 இன்ச் அலோய் வீல்ஸ், 9-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ரியர் ஏசி வென்ட்ஸ் மற்றும் கீலெஸ் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் போன்ற அம்சங்களை இது கொண்டுள்ளது.
ஸ்விஃப்ட் சிஎன்ஜி ஆனது 1.2 லிட்டர் Z-சீரிஸ் த்ரீ சிலின்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்ஜின் நிலையான முறையில் 80bhp மற்றும் 112Nm உற்பத்தி செய்கிறது. அதுவே சிஎன்ஜிக்கு மாறும்போது, 69bhp ஆகவும், 102Nm டோர்க்காவும் குறைக்கப்படுகிறது. மைலேஜைப் பொறுத்தவரை, ஸ்விஃப்ட் சிஎன்ஜி அதிகபட்சமாக கிலோவுக்கு 32.85 கிமீ மைலேஜைத் தரும்.
சமீபத்தில் வாகன உற்பத்தியாளர் ஸ்விஃப்ட்டின் நியூ-ஜென் டிசையரை நவம்பர் மாதம் அறிமுகப்படுத்துவதாக தெரிவித்தது. புதிய டிசையரில் எலக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் 360 டிகிரி சரவுண்ட் கேமரா போன்ற பல புதிய அம்சங்களைப் பெறும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்