- 8.19 லட்சத்தில் அறிமுகமானது
- மூன்று வேரியன்ட்ஸில் வழங்கப்படுகிறது
சமீபத்தில் சிஎன்ஜியில் இயங்கும் ஹேட்ச்பேக் காரின் விலையை வாகன உற்பத்தியாளர் இன்று அறிவித்தது. இதன் விலை 8.19 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். மேலும் இது மூன்று வேரியன்ட்ஸில் கிடைக்கின்றன. இந்த கட்டுரையில், புதிய ஸ்விஃப்ட் சிஎன்ஜியின் மைலேஜ் விவரங்களை பட்டியலிட்டுள்ளோம்.
புதிய மாருதி ஸ்விஃப்ட் சிஎன்ஜி VXi, VXi (O) மற்றும் ZXi வேரியன்ட்ஸில் கிடைக்கும். இது 1.2 லிட்டர் Z-சீரிஸ் த்ரீ-சிலிண்டர் இன்ஜினுடன் 60 லிட்டர் கொண்ட ஒரு சிஎன்ஜி டேங்குடன் வருகிறது. இந்த மோட்டார் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 69bhp மற்றும் 102Nm பீக் டோர்க்கை உற்பத்தி செய்யும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது. மைலேஜைப் பொறுத்தவரை, புதிய ஸ்விஃப்ட் சிஎன்ஜி 32.85 கிமீ/கிலோ மைலேஜை வழங்கும் என்று ஏஆர்ஏஐ கூறியது, இது முந்தைய ஜெனரேஷனை விட ஆறு சதவீதம் அதிகம்.
ஆர்டர் செய்தவுடன், வாடிக்கையாளர்கள் இதை 12 அக்டோபர், 2024 முதல் ஸ்விஃப்ட் சிஎன்ஜியைப் டெலிவரி பெறத் தொடங்குவார்கள். சந்தையில் அறிமுகமான நான்கு மாதங்களில், புதிய ஸ்விஃப்ட் ஏற்கனவே இந்தியா முழுவதும் 67,000 யூனிட் விற்பனையை பதிவு செய்துள்ளது. இப்போது, சிஎன்ஜி பதிப்பின் அறிமுகத்துடன், ஸ்விஃப்ட் பிராண்டின் சிஎன்ஜி போர்ட்ஃபோலியோவில் 14 வது மாடலாக மாறியுள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்