- நியூ ஜெனரேஷன் ஸ்விஃப்ட் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்
- 2023 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட கார்களில் மிகப்பெரிய தள்ளுபடி வழங்குகிறது
மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் இந்த ஆண்டு தனது நியூ ஜெனரேஷன்னை அறிமுகப்படுத்த உள்ளது. சமீபத்தில், நியூ ஜெனரேஷன் ஸ்விஃப்ட்டின் டெஸ்டிங் மாடல் சோதனையின் போது இந்திய சாலைகளில் காணப்பட்டது. தற்போதைய மாடலின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ. 5.99 லட்சம்.
ஜனவரியில் மாருதி ஹேட்ச்பேக்கை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் ரூ. 45,000 வரை சேமிக்கலாம். இருப்பினும், 2024 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட கார்களில் ரூ. 44,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதேசமயம் 2023 மாடலில் ரூ. 49,000 வரை பலன் கிடைக்கும். இந்த சலுகை கேஷ் தள்ளுபடிகள், கார்ப்பரேட் போனஸ் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் ஆகியவை அடங்கும்.
சலுகை | 2024 இல் தயாரிக்கப்பட்ட கார்ஸில் | 2023 இல் தயாரிக்கப்பட்ட கார்ஸில் |
கேஷ் தள்ளுபடி | ரூ. 20,000 | ரூ. 25,000 |
எக்ஸ்சேஞ்ச் போனஸ் | ரூ. 20,000 | ரூ. 20,000 |
கார்ப்பரேட் போனஸ் | ரூ. 4,000 | ரூ. 4,000 |
மொத்தம் | ரூ. 44,000 | ரூ. 49,000 |
ஸ்விஃப்ட் 1.2-லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜினைக் கொண்டுள்ளது, இது 89bhp மற்றும் 113Nm டோர்க்கையும் உருவாக்குகிறது. இதன் இன்ஜின் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏஎம்டீ கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. நிறுவனம் பொருத்திய சிஎன்ஜி கிட் அதன் VXi மற்றும் ZXi வேரியன்ட்ஸூடனும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்