- 16 மாடல்ஸில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் கிடைக்கிறது
- 2023-24 நிதியாண்டில் 1 லட்சம் ஆட்டோமேட்டிக் யூனிட்ஸை விற்பனை செய்யப்பட்டுள்ளன
இந்தியாவில் 10 லட்சம் ஆட்டோமேட்டிக் கார்ஸை விற்பனை செய்து மாருதி சுஸுகி புதிய சாதனை படைத்துள்ளது. தற்போது, இந்திய கார் தயாரிப்பாளரிடம் 16 மாடல்ஸ் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் விருப்பத்துடன் நாட்டில் கிடைக்கின்றன.
மாருதி சுஸுகி நான்கு வகையான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்களை வழங்குகிறது, இதில் ஆட்டோ கியர் ஷிஃப்ட், ஃபோர்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன், சிக்ஸ்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் இ-சிவிடீ யூனிட் ஆகியவை அடங்கும். பிராண்டின் படி, ஆட்டோமேட்டிக் வாகனங்களின் மொத்த விற்பனையில் 65 சதவீதம் ஏஜிஎஸ் டிரான்ஸ்மிஷன் விருப்பத்துடன் விற்கப்படுகிறது. அதேசமயம் 27 சதவீத மாடல்ஸ் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டவை.
மாருதி சுஸுகி இந்தியாவின் மார்க்கெட்டிங் மற்றும் சேல்ஸ் சீனியர் எக்ஸிக்யூடிவ் அதிகாரி, 'மாருதி சுஸுகி தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த டிரைவிங் அனுபவத்தை வழங்க தன்னால் முடிந்தவரை முயற்சி செய்து வருகிறது. 23-24 நிதியாண்டில் இதுவரை ஒரு லட்சம் ஆட்டோமேட்டிக் வாகனங்களை விற்பனை செய்துள்ளோம். இது குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என்று அவர் கூறினார்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்