- நாட்டின் மிகப்பெரிய சிஎன்ஜி போர்ட்ஃபோலியோவைக் கொண்டுள்ளது
- ஸ்விஃப்ட் சிஎன்ஜியும் விரைவில் சிஎன்ஜி ரேஞ்சில் சேர்க்கப்படும்
மாருதி சுஸுகி அதன் காலாண்டு மற்றும் மாதாந்திர விற்பனை புள்ளிவிவரங்களை வெளியிட்டு, மாருதி சுஸுகி 2024 நிதியாண்டின் முதல் காலாண்டில் தனது சிஎன்ஜி கார்களின் விற்பனையை வெளிப்படுத்தியுள்ளது. மிகப்பெரிய சிஎன்ஜி போர்ட்ஃபோலியோவுடன், கார் தயாரிப்பாளர் ஏப்ரல் முதல் ஜூன் 2024 வரை 1.38 லட்சம் சிஎன்ஜி கார்களை விற்பனை செய்துள்ளது.
இந்த காலகட்டத்தில் உள்நாட்டு சந்தையில் இந்த பிராண்ட் மொத்த விற்பனை 4.14 லட்சம் யூனிட்களை பதிவு செய்துள்ளது, இதில் 1.38 லட்சம் கார்கள் சிஎன்ஜி பொருத்தப்பட்ட மாடல்களாகும். இந்திய வாகன உற்பத்தியாளர் தற்சமயம் ஆல்டோ K10, செலிரியோ, ஈகோ, எஸ்-பிரஸ்ஸோ, வேகன் ஆர், டிசையர், பிரெஸ்ஸா, எர்டிகா, பலேனோ, ஃப்ரோன்க்ஸ், XL6 மற்றும் கிராண்ட் விட்டாரா உள்ளிட்ட 12 சிஎன்ஜி-பவர்ட் மாடல்கள் விற்பனையில் உள்ளன. இவற்றில் முதல் எட்டு மாடல்கள் அரீனா டீலர்ஷிப்கள் மூலம் விற்கப்படுகின்றன, மீதமுள்ள நான்கு பிராண்டின் ப்ரீமியம் நெக்ஸா அவுட்லெட்டுகள் மூலம் வழங்கப்படுகின்றன.
கூடுதலாக, சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நியூ ஜெனரேஷன் ஸ்விஃப்ட் வரும் மாதங்களில் சிஎன்ஜி வேரியன்ட்ஸிலும் அறிமுகமாகும். இந்த பிரபலமான ஹேட்ச்பேக், ஃபோர்த் ஜெனரேஷன் வெர்ஷன்க்கு முன், சில வேரியன்ட்ஸ் சிஎன்ஜி வழங்கியது. மேலும் என்னவென்றால், இந்த எம்பீவி தற்போது நாடு முழுவதும் 43,000 முன்பதிவுகளைக் கொண்டிருப்பதால் எர்டிகா சிஎன்ஜிக்கு நல்ல டிமாண்ட் உள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்