- இரண்டு கார்களின் அனைத்து வேரியன்ட்ஸிலும் இஎஸ்பி கிடைக்கும்
- விலையில் மாற்றம் இருக்காது
மாருதி சுஸுகி இப்போது எஸ்-பிரஸ்ஸோ மற்றும் ஆல்டோ K10 ஆகியவற்றில் இஎஸ்பி ஐ ஸ்டாண்டர்டாக அறிவித்துள்ளது. இந்த இரண்டு கார்களின் அனைத்து வேரியன்ட்ஸிலும் இந்த பாதுகாப்பு அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது மற்றும் அவற்றின் விலையில் எந்த மாற்றமும் இருக்காது.
எஸ்-பிரஸ்ஸோ மற்றும் ஆல்டோ K10 ஆகியவை பிராண்டின் ஹார்டெக்ட் பிளாட்ஃபார்ம் அடிப்படையாகக் கொண்ட என்ட்ரி-லெவல் சிறிய ரக கார்களாகும். டூயல் ஃப்ரண்ட் ஏர்பேக்குகள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ஈபிடியுடன் கூடிய ஏபிஎஸ், கோலப்ஸபெல் ஸ்டீயரிங் காலம், இன்ஜின் இம்மொபிலைசர் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய சில பாதுகாப்பு அம்சங்களுடன் இது வருகிறது. மேலும், சமீபத்தில் சேர்க்கப்பட்ட இஎஸ்பி என்பது எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் ஆகும், இது வாகனத்தின் நிலைத்தன்மையை மேம்படுத்தவும் விபத்துகளைத் தவிர்க்கவும் உதவுகிறது. இஎஸ்பி ஆனது, வாகனம் சறுக்குவதைத் தடுக்க, ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) மற்றும் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் (TCS) ஆகியவற்றுடன் இணைந்து செயல்படும்.
இந்த கார்களின் முந்தைய மாடல்கள் குளோபல் என்கேப் கிராஷ் டெஸ்ட்டில் மிகக் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளன. ஆனால், புதிய பாதுகாப்பு வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், பாதுகாப்புக்கு கட்டு போடுவது போல் உள்ளது. கூடுதல் பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களைச் சேர்ப்பது கார்கள் சிறந்த பாதுகாப்பு மதிப்பீடுகளை அடைய உதவும் மற்றும் இறுதியில் வாங்குபவர்களுக்கு பாதுகாப்பான தயாரிப்புகளுக்கு வழிவகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்