- மொத்தம் 1,89,082யூனிட்ஸ் விற்பனையாகி உள்ளது
- பஸ்சேன்ஜ்ர் காரின் சேல்ஸ் ஒரு ஒரு ஆண்டிற்கும் 16.36 சதவீதம் உயர்ந்துள்ளது
ஆகஸ்ட் 2023 இல் மாருதி சுஸுகி தனது சேல்ஸ் எண்ணிக்கையை வெளிப்படுதியது. இந்த நிறுவனம் ஆகஸ்ட் 2023 இல் 1,89,082யூனிட்ஸ் செய்தது, இதில் 1,58,678 டொமெஸ்டிக் மார்க்கெட், 24,614 எக்ஸ்போர்ட் மற்றும் 5,790 பிற ஓஇஎம்’ஸ் ஆகியவை அடங்கியுள்ளது. ஒப்பிடுகையில், கடந்த வருடம் இதே மாதம் 1,65,173 யூனிட்ஸ், இந்த பிராண்ட் விற்பனை செய்தது, இது 14.48 சதவீத வளர்ச்சியைக் குறிக்கிறது.
உற்பத்தியாளர், கடந்த மாதம் ஆல்டோ, எஸ்- பிரஸ்ஸோ, பலேனோ, செலிரியோ, டிசையர், இக்னிஸ், ஸ்விஃப்ட், வேகன் ஆர் மற்றும் சியாஸ் போன்ற மாடல்ஸில் 85,509 யூனிட்ஸ் விற்றது. இதற்கிடையில், பிரெஸ்ஸா, எர்டிகா, ஃப்ரோன்க்ஸ், கிராண்ட் விட்டாரா, இன்விக்டோ, ஜிம்னி, எஸ்-கிராஸ், XL6 மற்றும் ஈகோவின் விற்பனை 70,605 யூனிட்ஸாக இருந்தது.
சமீபத்தில், மாருதி சுஸுகி தனது அரீனா ரீட்டேல் செயினின் ஆறு வருட விழாவை நாட்டில் கொண்டாடியது. 2017 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அரீனா 2,392 நகரங்களில் 2,853 ஔட்லேட்ஸ் கொண்ட டீலர்ஷிப் நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது மற்றும் அதன் செயல்பாட்டிலிருந்து 70 லட்சத்திற்கும் அதிகமான கார்ஸ் விற்பனை செய்துள்ளது.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்