- டொமெஸ்டிக் பஸ்சேன்ஜ்ர் வாகன விற்பனை 15.45 சதவீதம் அதிகரித்துள்ளது
- சுஸுகி ஜிம்னி ஜூன் முதல் வாரத்தில் லான்ச் செய்யப்படும்
மாருதி சுஸுகி மே 2023 விற்பனைகள்:
மே 2023 இல் மொத்த விற்பனை 1,78,083 என மாருதி சுஸுகி அறிவித்துள்ளது.இதில் டொமெஸ்டிக் விற்பனைகள் 1,43,708 யூனிட்ஸ், லைட் கமர்ஷியல் வாகனங்கள் 2,888 யூனிட்ஸ், எக்ஸ்போர்ட்ஸ் 26,477 யூனிட்ஸ் மற்றும் பிற ஓஇஎம்ஸ்ளுக்கு 5,010 யூனிட்ஸ் விற்பனை ஆகியுள்ளது.
மாருதி சுஸுகி மே 2022 விற்பனைகள்:
ஒப்பிடுகையில், உற்பத்தியாளர் மே 2022 இல் 1,61,413 யூனிட்ஸை விற்பனை செய்துள்ளார், இதில் டொமெஸ்டிக் விற்பனை 1,24,474 யூனிட்ஸ், லைட் கமர்ஷியல் வாகனங்கள் 3,526 யூனிட்ஸ், 27,191 யூனிட்ஸ் எக்ஸ்போர்ட்ஸ்க்கு மற்றும் பிற ஓஇஎம்ஸ்ளுக்கு 6,222 யூனிட்ஸ் விற்பனை ஆகியுள்ளது.
காம்பேக்ட் மற்றும் மிட்-சைஸ் செக்மென்ட் விற்பனை:
சென்ற மாதத்தில் ஆல்டோ மற்றும் எஸ்-பிரஸ்ஸோவின் உற்பத்தி எண்ணிக்கை 12,236 யூனிட்ஸாக இருந்தது, அதே சமயம் சியாஸ் 992 யூனிட்ஸாக இருந்தது. உற்பத்தியாளர் பலேனோ, செலிரியோ, டிசையர், இக்னிஸ், ஸ்விஃப்ட், வேகன் ஆர் மற்றும் பிற மாடல்ஸின் உற்பத்தியில் 3,472 யூனிட்ஸ் வளர்ச்சியைக் கண்டது, இது ஏப்ரல் 2023 இல் 71,419 யூனிட்ஸாக இருந்தது.
யுடிலிட்டி வாகனங்கள் மற்றும் வேன் விற்பனைகள்:
பிரெஸ்ஸா, எர்டிகா, ஃப்ரோன்க்ஸ், ஜிம்னி, எஸ்-கிராஸ் மற்றும் XL6 ஆகியவற்றின் மொத்தம் 46,243 யூனிட்ஸ் இந்த மாதத்தில் தயாரிக்கப்பட்டன. ஈகோ வேனின் எண்ணிக்கை 12,818 யூனிட்ஸாக இருந்தது. கூடுதலாக, சென்ற மாதத்தில் உற்பத்தியாளரால் மொத்தம் 2,888 யூனிட் கமர்ஷியல் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டது.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்