- மாருதி சுஸுகி 13 சிஎன்ஜி மாடல்களைக் கொண்டுள்ளது
- இந்த காலாண்டில் அதிகம் விற்பனையாகும் சிஎன்ஜி கார்ஸ்
மாருதி சுஸுகி நிறுவனம் 2023-24 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான விற்பனை அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. எண்ணிக்கை அடிப்படையில், இந்திய வாகன உற்பத்தியாளர் 5.50 லட்சம் யூனிட்டுகளை விற்று, காலாண்டில் அதிக விற்பனையை பதிவு செய்துள்ளது. மேலும், இந்த பிராண்ட் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 1.18 லட்சத்திற்கும் அதிகமான சிஎன்ஜி கார்களை விற்பனை செய்துள்ளது.
தற்போது, ஆல்டோ K10, ஈகோ, எஸ்-பிரஸ்ஸோ, செலிரியோ, வேகன் ஆர், ஸ்விஃப்ட், டிசையர், பிரெஸ்ஸா, எர்டிகா, XL6, கிராண்ட் விட்டாரா, பலேனோ மற்றும் ஃப்ரோன்க்ஸ் போன்ற 13 மாடல்களை சிஎன்ஜி வெர்ஷனில் மாருதி சுஸுகி வழங்குகிறது. இதன் மூலம், மாருதி சுஸுகி பல்வேறு பிரிவுகளிலும் விலைப் புள்ளிகளிலும் சிஎன்ஜி கார்களை வழங்கும் சிறந்த பிராண்டாகத் தொடரும்.
மேலும் செய்திகளில், டோக்கியோவில் 2023 ஜப்பான் மொபிலிட்டி ஷோவில் சுஸுகி இந்தியா ஸ்விஃப்ட் கான்செப்ட்டை காட்சிப்படுத்தியது. இந்த ஹேட்ச்பேக் 2024 ஆம் ஆண்டில் இந்திய மார்க்கெட்டில் நுழையும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்