- மறுஅழைப்பை 24 ஜூலை, 2023 முதல் அமலுக்கு வந்தது
- பழுதடைந்த பாகங்கள் இலவசமாக மாற்றப்படும்
இந்தியாவில் 87,000க்கும் மேற்பட்ட எஸ்-பிரஸ்ஸோ மற்றும் ஈகோ வேன்ஸை திரும்பப் பெறுவதாக மாருதி சுஸுகி அறிவித்துள்ளது. ஜூலை 24, 2023 அன்று ஒரு அறிக்கையை வெளியிடுவதன் மூலம், திரும்பப் பெறுவதற்கான காரணம் ஸ்டீயரிங் டை ரோட்டின் ஒரு பகுதியில் ஏற்படக்கூடிய குறைபாடுதான் என்பதை கார் தயாரிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இது ஒரு தீவிரமான பிரச்சனையாக இருக்கலாம், சில சந்தர்ப்பங்களில், பகுதி உடைந்து வாகனத்தின் ஹேண்ட்லிங் மற்றும் ஸ்டீயரிங் திறனை பாதிக்கலாம்.
எஸ்-பிரஸ்ஸோ மற்றும் ஈகோ மறுஅழைப்பு விவரங்கள்
அறிக்கையின்படி, கேள்விக்குரிய வாகனங்கள் ஜூலை 5, 2021 மற்றும் பிப்ரவரி 15, 2023 க்கு இடையில் தயாரிக்கப்பட்டவை. இந்த சிக்கலைத் தீர்க்க, சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மாருதி சுஸுகி-அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டர்ஸ் மற்றும் வர்க்ஷாப்ஸில் இருந்து தகவல் தொடர்புகளைப் பெறலாம். இந்த வாகனங்களில் டெஸ்டிங் செய்யப்பட்டு, பழுதடைந்த பாகங்கள் இலவசமாக மாற்றப்படும்.
மற்ற மாடல்ஸுடன் மாருதி ஈகோ மற்றும் எஸ்-பிரஸ்ஸோவின் முந்தைய மறுஅழைப்புகள்
இந்த ஆண்டு ஜனவரியில், கார் தயாரிப்பாளர் ஆல்டோ K10, பிரெஸ்ஸா, பலேனோ, கிராண்ட் விட்டாரா, எஸ்-பிரஸ்ஸோ மற்றும் ஈகோ உள்ளிட்ட மாடல்ஸின் தயாரிப்புகளை திரும்பப் பெறத் தொடங்கினார். டிசம்பர் 8, 2022 மற்றும் ஜனவரி 12, 2023 க்கு இடையில் தயாரிக்கப்பட்ட சந்தேகத்திற்குரிய மாடல்ஸில் ஏர்பேக் கண்ட்ரோலர் யூனிட்டில் குறைபாடு இருந்தது.
மாருதி சுஸுகி எஸ்- பிரஸ்ஸோ மற்றும் ஈகோ விலை மற்றும் வேரியண்ட்ஸ்
தற்போது, மாருதி சுஸுகி எஸ்- பிரஸ்ஸோ மற்றும் ஈகோ ஆகியவை முறையே ஆறு மற்றும் இரண்டு வேரியண்ட்ஸில் வழங்கப்படுகின்றது. இதன் விலை ரூ.4.26 லட்சத்திலிருந்து ரூ.6.11 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). மறுபுறம், ஈகோ வேன் ரூ.5.27 லட்சம் பேஸ் வேரியண்ட்டிற்கு ரூ.6.53 லட்சம் ஃபைவ்-சீட்டர் கொண்ட சிஎன்ஜி வெர்ஷன்க்கு, (அனைத்து விலைகள், எக்ஸ்-ஷோரூம்).
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்