- ஒரு ஒரு ஆண்டிற்கும் உற்பத்தியில் 9.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்கிறது
- மாருதி ஜிம்னியின் விலை ஜூன் 7, 2023 இல் அறிவிக்கப்படும்
உற்பத்தியில் தொடர்ச்சியான வீழ்ச்சியைக் கண்ட பிறகு, மாருதி சுஸுகி மே 2023 இல் அதை அதிகரித்தது. சென்ற மாதத்தில் 1,80,221 வாகனங்களை உற்பத்தி செய்தது, அதில் 1,76,218 பஸ்சேன்ஜ்ர் வாகனங்கள் ஆகும்.
மாருதி சுஸுகி செக்மென்ட் வாரியான உற்பத்தி
மினி மற்றும் காம்பேக்ட் கார்ஸ் செக்மென்ட்டில், மாருதி 1,19,731 கார்ஸை தயாரித்துள்ளது. இந்த செக்மென்ட்டில் ஆல்டோ, ஸ்விஃப்ட், வேகன் ஆர், இக்னிஸ், பலேனோ மற்றும் செலிரியோ ஆகியவை அடங்கும். மேலும், மிட்-சைஸ் செடான், சியாஸின் 1,953 யூனிட்ஸ் உற்பத்தி செய்யப்பட்டது.
யுடிலிட்டி மற்றும் வேன்ஸ் கிளாஸிற்கு, மொத்தம் 54,534 யூனிட்ஸ் செய்யப்பட்டன. இந்த செக்மென்ட்டில் கிராண்ட் விட்டாரா, பிரெஸ்ஸா, எர்டிகா, XL6, ஃப்ரோன்க்ஸ் மற்றும் வரவிருக்கும் ஜிம்னி போன்ற பிராண்டின் எஸ்யுவிஸ் மற்றும் எம்பீவிஸ் உள்ளன.
வரவிருக்கும் மாருதி கார்ஸ்
மாருதி ஜிம்னி எஸ்யுவியின் விலைகளை ஜூன் 7, 2023 இல் அறிவிக்கப்படும். ஃபைவ்-டோர் கொண்ட ஜிம்னி ஜனவரி 2023 இல் ஆட்டோ எக்ஸ்போவில் இந்தியாவில் அறிமுகமானது மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது ஜெட்டா மற்றும் ஆல்ஃபா வேரியண்ட்ஸில் வழங்கப்படுகிறது மற்றும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் கிடைக்கும்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்