- பஸ்சேன்ஜ்ர் கார் உற்பத்தி 5.18 சதவீதம் குறைந்துள்ளது
- மொத்தம் 1,37,133 யூனிட்ஸ் உற்பத்தி செய்யப்பட்டது
மே 2023 இல் உற்பத்தி செய்யப்பட்ட 1,80,221 யூனிட்ஸுடன் ஒப்பிடுகையில், மாருதி சுஸுகி ஜூன் 2023 இல் அதன் உற்பத்தியில் சரிவைக் கண்டுள்ளது. கடந்த மாதம் 1,37,133 யூனிட் வாகனங்களை உற்பத்தி செய்தது. இதில் ஜூன் மாதத்தில் 1,33,798 பஸ்சேன்ஜ்ர் வாகனங்கள் மற்றும் 3,335 லைட் கமர்ஷியல் வாகனங்கள் உற்பத்தியை உள்ளடக்கியது.
ஜூன் 2023 இல் மாருதியின் ஹேட்ச்பேக் மற்றும் செடான் உற்பத்தி
கடந்த மாதத்தில், ஓஇஎம் ஆனது ஆல்டோ மற்றும் எஸ்-பிரஸ்ஸோவின் 14,646 யூனிட்ஸையும், சியாஸின் 2,694 யூனிட்ஸையும் தயாரித்தது. பலேனோ, செலிரியோ, டிசையர், இக்னிஸ், ஸ்விஃப்ட் மற்றும் வேகன்-ஆர் ஆகியவற்றின் உற்பத்தி எண்ணிக்கை கடந்த ஆண்டு இதே மாதத்தில் 81,021 யூனிட்ஸுடன் ஒப்பிடும்போது 71,578 யூனிட்டுஸாக குறைந்துள்ளது.
ஜூன் 2023 இல் மாருதி எஸ்யுவி மற்றும் எம்பீவியின் தயாரிப்பு
பிரெஸ்ஸா, எர்டிகா, ஃப்ரோன்க்ஸ், ஜிம்னி மற்றும் XL6 ஆகியவற்றின் மொத்தம் 35,128 யூனிட்ஸ் இந்த மாதத்தில் தயாரிக்கப்பட்டது. ஈகோ வேனின் எண்ணிக்கை 9,752 யூனிட்ஸாக இருந்தது. மேலும், கடந்த மாதத்தில் மொத்தம் 3,335 லைட் கமர்ஷியல் வாகனங்கள் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்டது.
மாருதி இன்விக்டோ இந்தியாவில் லான்ச் செய்யப்பட்டது
நேற்று, மாருதி சுஸுகி டொயோட்டா இனோவா ஹைகிராஸின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷனை நாட்டில் அறிமுகப்படுத்தியது, இதன் விலை ரூ.24.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). ஃபிளாக்ஷிப் எஸ்யுவி, இன்விக்டோ, ஏழு மற்றும் எட்டு சீட்டர் அமைப்புகளில் மூன்று வேரியண்ட்ஸில் வழங்கப்படும்.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்