- பல ஃப்யூல்ஸ் ஆப்ஷன்ஸைக் கொண்ட கார்ஸைத் தொடர்ந்து வழங்கும்
- மேலும் பல ப்ரீமியம் கார்ஸை அறிமுகப்படுத்தும்
இந்தியாவில் மாருதி சுஸுகியின் 40 ஆண்டுகால பாரம்பரியம் SS80 உடன் தொடங்கியது (மாருதி 800 என்று நன்கு அறியப்பட்டவை). சிறிய மற்றும் பட்ஜெட் கார்ஸ் எப்பொழுதும் மாருதியின் பலமாக இருந்து வருகிறது, கிட்டத்தட்ட ஒவ்வொரு வகையான வாடிக்கையாளர்கள்க்கும், குறிப்பாக புதிய நுழைவு நிலை சிறிய கார்ஸ்க்கு. இப்போது, நான்கு தலைமுறைக்குப் பிறகு, இந்த பிராண்டின் 15க்கும் மேற்பட்ட கார்ஸின் ஆரம்ப விலை வெறும் ரூ. 4 லட்சம் முதல் ரூ. 11.50 லட்சம் வரை உள்ளன. எஸ்யுவிஸின் வளர்ச்சி மற்றும் பெரிய ப்ரீமியம் கார்ஸை வாங்கும் முன்னுரிமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, கடந்த நிதியாண்டில் 2022-23 இல் சிறிய கார்ஸின் வளர்ச்சி தேக்கமடைந்ததை மாருதி சுஸுகி கண்டது.
தற்போது, ஆல்டோ k10, வேகன் ஆர் மற்றும் செலிரியோ போன்ற பட்ஜெட் கார்ஸ் உட்பட, ஆட்டோமேக்கரின் அரீனா ஷோரூம்ஸ் மூலம் பட்ஜெட் ரேஞ்ச்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த கார்ஸ் விற்பனையில் முக்கிய பங்கு வகிக்கும் அதே வேளையில், வரவிருக்கும் ஆண்டுகளில் இந்த பிரிவின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பிராண்ட் காணவில்லை. பெரிய மற்றும் ப்ரீமியம் கார்ஸை நோக்கி வாடிக்கையாளர்களின் ஆர்வம் மாறுவதே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று மாருதியின் நிறுவனம் எதிர்பார்க்கிறது.
மாருதியின் மற்ற ஃப்யூல் கார்ஸ்
மாருதி சுஸுகி மட்டுமே 12 சிஎன்ஜி கார்ஸை கொண்ட ஒரே பிராண்ட ஆகும். அதுமட்டுமின்றி, அதன் பெரும்பாலான கார்ஸ் மைல்ட்-ஹைப்ரிட் டெக்னாலஜி கொண்டவை. வருகின்ற 2025 ஆம் ஆண்டில், மாருதி தனது முதல் எலக்ட்ரிக் வாகனமான இஎக்ஸ்வி எஸ்யுவியை அறிமுகப்படுத்தும், இது ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் அறிமுகமானது.
மேலும் நெக்ஸா கார்ஸ் உள்ளே வருமா?
மாருதியின் ப்ரீமியம் விற்பனைப் பிரிவான நெக்ஸா துணை பிராண்ட் ஆகஸ்ட் 2015 இல் எஸ் -கிராஸ் அறிமுகத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் பலேனோ மற்றும் இக்னிஸ் ஹேட்ச்பேக்ஸ் அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளியிடபட்டது. தற்போது, ஆறு மாடல்ஸ் நெக்ஸா அவுட்லெட்ஸ் வழியாக விற்கப்படுகின்றன, சமீபத்திய வெளியான ஃப்ரோன்க்ஸும் இதில் உள்ளடங்கும். மாதாந்திர அடிப்படையில், நெக்ஸா கார்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு விற்பனையில் சுமார் 32,000 முதல் 35,000 யூனிட்ஸ் வரை பங்களிக்கின்றன.
மாருதி புதிய ப்ரீமியம் கார்ஸை அறிமுகப்படுத்துமா?
கடந்த ஆண்டில், கிராண்ட் விட்டாராவுடன் மிட்-சைஸ் அளவிலான எஸ்யுவி பிரிவில் மாருதி இறங்கியது. இந்த எஸ்யுவி ஒரு உடனடி வெற்றியைப் பெற்றது மற்றும் பிராண்ட் ஒவ்வொரு மாதமும் 8,000 முதல் 10,000 கிராண்ட் விட்டாராவை விற்பனை செய்கிறது. இந்த வரிசையில் ஜிம்னி மற்றும் டொயோட்டா ஹைகிராஸ் அடிப்படையிலான எம்பீவி ஆகும். ஜிம்னியின் விலை அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே மாதிரி எம்பீவி ஜூலை 2023 இல் அறிமுகமாகும்.
சமீபத்தில் நடைபெற்ற வருடாந்திர முடிவு கூட்டத்தில், மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட்டின் தலைவர் ஆர்.சி.பார்கவா, “சிறிய கார்ஸ்க்கான தேவை தேக்க நிலையில் உள்ளது. 2023-24 நிதியாண்டில், அதற்கான குறிப்பிடத்தக்க வளர்ச்சியை நாம் உண்மையில் காணவில்லை”.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்