- நெக்ஸா ரேஞ்சில் எட்டு மாடல்ஸ் உள்ளன
- 2023-24 நிதியாண்டின் விற்பனையில் 31 சதவீத பங்களிப்பு
மாருதி சுஸுகி நெக்ஸா இந்தியாவில் தனது எட்டாவது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. கார் தயாரிப்பாளரின் ப்ரீமியம் ரீட்டேல் விற்பனையைக் கடந்த சில ஆண்டுகளில் நிறைய வளர்ச்சியைக் கண்டுள்ளது. அரீனா துணை பிராண்ட் 2015 இல் எஸ்கிராஸ் மற்றும் பலேனோவை அறிமுகப்படுத்தியதன் மூலம் நெக்ஸா உடன் இணைந்தது. இன்விக்டோ அறிமுகத்திற்குப் பிறகு, மாருதியின் நெக்ஸா ரேஞ்சில் இப்போது பலேனோ, இக்னிஸ், சியாஸ், XL6, கிராண்ட் விட்டாரா, ஃப்ரோன்க்ஸ், ஜிம்னி மற்றும் இன்விக்டோ ஆகிய எட்டு மாடல்ஸ் உள்ளன.
மாருதி சுஸுகி நெக்ஸா விற்பனை மற்றும் டீலர்ஷிப்ஸ்
நெக்ஸா அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, ஜூலை 2023 வரை, பிராண்ட் 2 மில்லியனுக்கும் அதிகமான யூனிட்ஸை விற்பனை செய்துள்ளது. அதே நேரத்தில், 2019 ஆம் ஆண்டில் 10 லட்சம் யூனிட்ஸையும், 2021 ஆம் ஆண்டில் 15 லட்சம் யூனிட்ஸையும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
எட்டு ஆண்டுகளில், நெக்ஸா விற்பனை 2015 இல் 5 சதவீதத்தில் இருந்து 2023-24 நிதியாண்டின் முதல் காலாண்டில் 31 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மாருதி சுஸுகி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட்டின் மார்கெட்டிங் மற்றும் சேல்ஸின் மூத்த செயல் அதிகாரியான ஷஷாங்க் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், “வாடிக்கையாளர்களின் கார் வாங்கும் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் 2015 ஆம் ஆண்டு நெக்ஸா அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது நெக்ஸா எட்டு வருடங்களை நிறைவு செய்து 2 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களால் விரும்பப்பட்டது.”
மாருதி சுஸுகி இன்விக்டோ எம்பீவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது
இன்விக்டோ எம்பீவி அறிமுகத்துடன், பிராண்ட் ப்ரீமியம் பிரிவில் அதன் இருப்பை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. இந்த மாடலின் ஆரம்ப விலை ரூ.24.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்