- ஆல்ஃபா, ஜீட்டா மற்றும் டெல்டா வேரியன்ட்ஸில் கிடைக்கும்
- சில காஸ்மெட்டிக் அப்டேட்களை பெறும்
மாருதி சுஸுகி தனது பிரபலமான எஸ்யுவி கிராண்ட் விட்டாராவின் புதிய டொமினியன் எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இரண்டிலும் ஆல்ஃபா, ஜீட்டா மற்றும் டெல்டா வேரியன்ட்ஸுடன் கிடைக்கும். இந்த எடிஷனில் புதிய பார்ட்ஸ் மற்றும் சிறந்த அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன, இது மேலும் சிறப்புடையதாக உள்ளது. கூடுதலாக, இது 2 லட்சம் யூனிட்களை விற்பனை செய்த மிட்-சைஸ் எஸ்யுவிகளில் அதிவேகமாக மாறியுள்ளது. அதில் உள்ள அம்சங்களைப் பற்றி விரிவாக இதில் பார்போம்.
இருப்பினும், இது ஒரு இலவச தொகுப்பாக வழங்கப்படுகிறது, இது ஆல்ஃபா, ஜீட்டா மற்றும் டெல்டா வேரியன்ட்ஸில் மட்டுமே கிடைக்கும் மற்றும் அவற்றின் விலைகளில் தனித்தனியாக சேர்க்கப்படும், அவற்றின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
வேரியன்ட்ஸ் | மதிப்பு கூட்டப்பட்ட பார்ட்ஸின் விலை |
ஆல்ஃபா | ரூ. 52,699 |
ஜீட்டா | ரூ. 49,999 |
டெல்டா | ரூ. 48,599 |
இந்த வெர்ஷனில் சைட் ஸ்டெப்ஸ், ரியர் ஸ்கிட் பிளேட்ஸ், பாடி சைட் மோல்டிங், டோர் வைசர் மற்றும் பிரீமியம் கார் கேர் கிட் போன்ற அக்செசரிஸ் கிடைக்கும். உட்புறத்தில் டூயல்-டோன் சீட் கவர்கள், ஆல்-வெதர் 3D மேட்ஸ் மற்றும் இன்டீரியர் ஸ்டைலிங் கிட் போன்றவை வழங்கப்பட்டுள்ளன, இது இன்னும் வசதியாகவும் ஸ்டைலாகவும் இருக்கும்.
மாருதி சுஸுகியின் மார்கெட்டிங் மற்றும் சேல்ஸ் அதிகாரி பார்த்தோ பானர்ஜி கூறுகையில், 'கிராண்ட் விட்டாரா மிட்-எஸ்யுவி செக்மெண்ட்டில் பட்டையக்கிளப்பிக்கொண்டு இருக்கிறது, மேலும் டொமினியன் வெர்ஷன் அதை இன்னும் சிறப்பாக எடுத்துச் செல்கிறது. இந்த மாடல் புதிய ஸ்டைலிங் மற்றும் வசதியான உட்புறத்தைக் கொண்டுள்ளது, இது வாடிக்கையாளர்கள் இன்னும் அதிகமாக விரும்புவார்கள்.
பண்டிகை கால சிறப்பு சலுகை
இந்த பண்டிகை காலத்தில் ஏதாவது சிறப்பு மற்றும் கஸ்டமைஸ் எஸ்யுவியை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக டொமினியன் வெர்ஷன் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இது சுஸுகியின் புகழ்பெற்ற ஆல்கிரிப் செலக்ட் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது, இது ஆஃப்-ரோடிங்கிற்கு சிறந்ததாக அமைகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்