- தற்போது மாதத்திற்கு 3,500 முன்பதிவுகள் பெறப்படுகின்றன
- இந்தியாவில் விலைகள் ரூ. 12.74 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் வெளியிடப்பட்டது, மாருதி சுஸுகி ஃபைவ்-டோர் ஜிம்னியை 7 ஜூன் 2023 அன்று நாட்டில் அறிமுகப்படுத்தியது. அதன் பின்னர், இந்த எஸ்யுவி இந்திய மார்க்கெட்டில் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. அதன் புகழ் மற்றும் வாகன ஆர்வலர்களின் அமோக வரவேற்புடன், செப்டம்பர் 2023 நிலவரப்படி, ஜிம்னிக்கான தற்போதைய திறந்த முன்பதிவு 10,000 யூனிட்ஸ்க்கு மேல் உள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த எஸ்யுவிக்கு வாகன உற்பத்தியாளர் மாதத்திற்கு 3,500 முன்பதிவுகளை பெற்று வருகிறது.
ஃபைவ்-டோர் எஸ்யுவி ஆனது ஜெட்டா மற்றும் ஆல்ஃபா என இரண்டு வேரியண்ட்ஸில் இரண்டு டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் ஐந்து மோனோடோன் மற்றும் ஒரு டூயல்-டோன் வண்ண விருப்பங்களில் இருந்து ஜிம்னியை தேர்வு செய்யலாம். முந்தையவற்றில் க்ரானைட் க்ரே, நெக்ஸா ப்ளூ, ப்ளூயிஷ் பிளாக், சிஸ்லிங் ரெட் மற்றும் பேர்ல் ஆர்க்டிக் ஒயிட் ஆகியவை அடங்கும். பிந்தையது, மறுபுறம், கைனடிக் எல்லோ மற்றும் சிஸ்லிங் ரெட் ஆகியவற்றை உள்ளடக்கியது - இரண்டும் ப்ளூயிஷ்-பிளாக் ரூஃப் உடன்.
லேடர் ஃப்ரேம் சேஸ்ஸில் கட்டப்பட்ட ஜிம்னியில் 1.5 லிட்டர் K15B பெட்ரோல் இன்ஜினில் கிடைக்கிறது, இது 103bhp மற்றும் 134Nm டோர்க்கை வெளிப்படுத்தும். இது ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் அல்லது ஃபோர்-ஸ்பீட் டோர்க் கன்வர்ட்டர் உடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் குறைந்த அளவிலான கியர்பாக்ஸுடன் மாருதியின் ஆல் க்ரிப் ப்ரோ 4x4 சிஸ்டம் வழியாக நான்கு சக்கரங்களுக்கும் சக்தியை அனுப்புகிறது.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்