- ஜிம்னி இரண்டு வேரியண்ட்ஸில் கிடைக்கிறது
- இதில் K15B இன்ஜின் பொருதப்பட்டுள்ளது
மாருதி சுஸுகி சமீபத்தில் தனது ஆஃப்-ரோடர் ஜிம்னியை ரூ.12.74 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது. இது இரண்டு வேரியண்ட்ஸ் மற்றும் ஒரு இன்ஜின் விருப்பத்திலும் கிடைக்கிறது. விலைகள் அறிவிக்கப்பட்ட உடனே, கார் தயாரிப்பாளர் ஏற்கனவே எஸ்யுவியின் டெலிவெறியை தொடங்கியுள்ளார். இதற்கிடையில், ஜிம்னியின் ஜெட்டா மாடலின் ஆட்டோமேட்டிக் பேஸ் வேரியண்ட் டீலர்ஷிப்பில் காணப்பட்டது, அதன் விவரங்களை இந்த கட்டுரையில் நாங்கள் உங்களுக்கு சொல்லப் போகிறோம்.
மாருதி ஜிம்னி பேஸ் வேரியண்ட் கலர் ஆப்ஷன்ஸ்
பார்க்கப்பட்ட மாதிரி ஜெட்டா ஏடீ, இது ப்ளூயிஷ் பிளாக் வண்ணதில் இருந்தது. இந்த வேரியண்ட்டின் விலை ரூ.13.94 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). புதிய ஜிம்னியை சிஸ்லிங் ரெட், நெக்ஸா ப்ளூ, க்ரானைட் க்ரே, பேர்ல் ஆர்க்டிக் ஒயிட், ப்ளூயிஷ் பிளாக், சிஸ்லிங் ரெட் உடன் ப்ளூயிஷ் பிளாக் ரூஃப், மற்றும் கைனடிக் எல்லோ என ஆறு வண்ண விருப்பங்களில் பெறலாம்.
மாருதி ஜிம்னி ஜெட்டா எக்ஸ்டீரியர்
பேஸ் ஜிம்னியின் எக்ஸ்டீரியர் பற்றி பேசுகையில், ஜெட்டா வேரியண்ட்டில் ஸ்டீல் வீல்ஸ், குரோம் பிளேட்ஸ் கூடிய கன்மெட்டல் க்ரே கிரில், எலெக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட்டெபல் ஓஆர்விஎம்ஸ், வைப்பர்ஸுடன் கூடிய ஃப்ரண்ட் மற்றும் ரியர் வாஷர்ஸ், ரியர் டிஃபோகர் மற்றும் டிரிப் ரெயில்ஸ் ஆகியவற்றைப் பெறுகிறது.
ஜிம்னி ஆஃப்-ரோடர் அம்சங்கள்
மாருதி சுஸுகி ஜிம்னியின் பேஸ் மாடல் ஜெட்டா வேரியண்ட்டில், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே உடன் 7 இன்ச் ஸ்மார்ட்ப்ளே ப்ரோ டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீயரிங்கில் பொருத்தப்பட்ட கண்ட்ரோல்ஸ் மற்றும் மேனுவல் டே/நைட் ஐஆர்விஎம் போன்ற பல அம்சங்களைப் பெறுகிறது.
ஜிம்னி பேஸ் மாடல் இன்ஜின் மற்றும் அம்சங்கள்
பேஸ் மாடல் ஜெட்டாவைத் தவிர, ஜிம்னியானது K15B சீரிஸின் 1.5-லிட்டர் என்ஏ (நேச்சுரலி அஸ்பிரெடெட்) இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் அல்லது ஃபோர்-ஸ்பீட் டோர்க் கன்வர்ட்டர் யூனிட் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது பிராண்டின் ஆல்க்ரிப் ப்ரோ 4x4 சிஸ்டமும் பெறுகிறது. இதன் இன்ஜின் 103bhp மற்றும் 134Nm டோர்க்கை உருவாக்குகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்